சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'50 ஆண்டாவது உறுதியா இருக்கணும்!'

Added : ஆக 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
'50 ஆண்டாவது உறுதியா இருக்கணும்!'சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றியத்தில், 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான வகுப்பறை கட்டடம் கட்ட நிர்வாக அனுமதி ஆணையை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வழங்கினார்.அப்போது அவர் கூறுகையில், 'பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில், ஐந்து ஆண்டுக்கு, 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 18 ஆயிரம் வகுப்பறைகள், தேவையான கழிப்பறைகள்
 பக்க வாத்தியம்


'50 ஆண்டாவது உறுதியா இருக்கணும்!'



சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றியத்தில், 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான வகுப்பறை கட்டடம் கட்ட நிர்வாக அனுமதி ஆணையை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வழங்கினார்.அப்போது அவர் கூறுகையில், 'பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில், ஐந்து ஆண்டுக்கு, 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 18 ஆயிரம் வகுப்பறைகள், தேவையான கழிப்பறைகள் பள்ளிகளில் கட்டப்பட உள்ளன. இதில், நடப்பாண்டில், 1,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'ஐந்தாண்டில், 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டுவது நல்ல விஷயம் தான்... ஆனா, புதிய கட்டடம், 50 ஆண்டாவது உறுதியாக இருக்கணும்... அதை முதலில் உறுதிப்படுத்துங்க...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.


'கலெக்டருக்கு சபாஷ் போடலாம்!'



திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்தது. இதில், விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைக்கு, உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.விவசாயி ஒருவர், 'ஏழை சொல் எங்கே எடுபடப் போகிறது' என, குறிப்பிட்ட போது, குறுக்கிட்ட கலெக்டர், 'நீங்கள் அப்படி பேசக்கூடாது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்' என்றார்.மற்றொரு விவசாயி விரக்தியாக பேசிய போது, 'நாங்களும் விவசாயிகள் தான். அரசு நிர்வாக பொறுப்பில் உள்ளதால், இங்கு அமர்ந்துள்ளோம். நீங்கள் எதிரே அமர்ந்துள்ளீர்கள்' என, கலெக்டர் கூறினார்.
வங்கி கடன் தொடர்பாக ஒருவர் பேசிய போது, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில், 'லோன் கேட்டு வருவோரை, லோ லோவென அலைய வைக்கும் மேலாளரே...' என, நடிகர் சந்தானத்தின் காமெடி வசனத்தை கூறிய கலெக்டர், 'அதுபோல எதுவும் நடக்காது'
என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'குறைதீர் கூட்டத்துக்கு வந்தாலே, வேதனையில் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள், இன்னைக்கு தான் வாய்விட்டு சிரித்து ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்...
கலெக்டருக்கு சபாஷ் போடலாம்...' என, பாராட்டி விட்டு புறப்பட்டார்.


'பைல்களை துாசி தட்டுங்கய்யா!'



கோவை கலெக்டர் சமீரன், வேளாண், உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில், கோவை, வேளாண் பல்கலையில், மேற்கு மண்டல குழு கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்கியது முதல் அலுவலர்கள் பலரும் துாங்கி வழிந்தனர்.
இயக்குனர் அண்ணாதுரை பேசிய போது, ஈரோட்டை சேர்ந்த வேளாண் அலுவலர் ஒருவர் துாங்க, கடுப்பான இயக்குனர், அவர் பெயரை குறிப்பிட்டு, 'டோஸ்' விட்டார். அதன் பிறகே, பல அதிகாரிகளும் துாக்கம் கலைந்து, கூட்டத்தை கவனிக்க துவங்கினர்.
இதை வேடிக்கை பார்த்த விவசாயி ஒருத்தர், 'இங்க இவங்க துாங்குறாங்க... இவங்க ஆபீசுல விவசாயிகளுக்கு போட்ட திட்டங்களுக்கான பைல்கள் துாங்குது... இவங்களை எழுப்புன மாதிரி, பைல்களையும் கொஞ்சம் துாசி தட்டி எடுக்க ஏற்பாடு செய்யுங்கய்யா...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-ஆக-202206:41:40 IST Report Abuse
D.Ambujavalli இத்தனை கோடி நிதியில் 'சென்றது போக நின்றதில்' கட்டும் பள்ளிகள் ஐம்பது இல்லை, ஐந்து வருஷம் நிற்குமா என்று பார்ப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X