டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 06, 2022 | கருத்துகள் (2) | |
முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்: முல்லை பெரியாறு அணை நீர் மட்டம், 136 அடியை நெருங்கி உள்ளது. அணைக்கு அதிகப்படியான நீர் வரத்து உள்ளதால், அணை நீர் மட்டம் திடீரென உயர வாய்ப்புள்ளது. எனவே, அணையின் நீர் மட்டத்தை, படிப்படியாக குறைக்க வேண்டும். நீர் வரத்தை விட அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற, தங்கள் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.டவுட் தனபாலு:


'டவுட்' தனபாலு

முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்: முல்லை பெரியாறு அணை நீர் மட்டம், 136 அடியை நெருங்கி உள்ளது. அணைக்கு அதிகப்படியான நீர் வரத்து உள்ளதால், அணை நீர் மட்டம் திடீரென உயர வாய்ப்புள்ளது. எனவே, அணையின் நீர் மட்டத்தை, படிப்படியாக குறைக்க வேண்டும். நீர் வரத்தை விட அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற, தங்கள் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

டவுட் தனபாலு: 'முல்லை பெரியாறு நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திக்கலாம்' என உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது... ஆனாலும், வருஷா வருஷம் மழைக்காலத்துல செயற்கையான பீதியை ஏற்படுத்தி, அணை நீர்மட்டத்தை, 136 அடிக்கு மேல உயர்த்தாம தடுப்பது நியாயமா என்பது தான் எங்க, 'டவுட்!'


அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி:
தைவானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகையை, சீனா காரணமாக பயன்படுத்துகிறது. இந்த விவகாரத்தில், சீனா அதிகப்படியாக எதிர்வினையாற்றுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கையில், சீனா இறங்கும் என்பதை எதிர்பார்த்தோம். சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளது.

டவுட் தனபாலு: இப்படித்தான் உக்ரைன் மேல ரஷ்யா போர் தொடுத்தப்பவும் வீரவசனம் பேசினீங்க... உங்களை நம்பி களத்துல இறங்கிய உக்ரைன், உருக்குலைஞ்சது தான் மிச்சம்... இப்ப, உங்க கையில தைவான் சிக்கியிருக்குது... அங்கயாவது கடைசி வரை களத்துல நிற்பீங்களா அல்லது பாதியிலயே, 'பல்பு' வாங்கிடுவீங்களா என்பது தான் எங்க, 'டவுட்!'


தலைமைச் செயலர் இறையன்பு:
அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் நாளில் அல்லது அதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, பதவி உயர்வு அளிப்பதற்கு வசதியாக, பணியில் உள்ள மூத்தோர் விடுப்பில் செல்கின்றனர். அதனால், ஏற்படும் செயற்கையான காலி பணியிடங்களில், சிலரை பதவி உயர்வு அளித்து அமர்த்துவதை, கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

டவுட் தனபாலு: 'அரசு பணியாளர் பதவி உயர்வுல கோல்மால் செஞ்சா, சஸ்பெண்ட், டிஸ்மிஸ் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என எச்சரிக்கை செய்யாம, 'இதை தவிர்க்கணும்'னு நாசூக்கா அறிவுரை கூறுவது ஏன் என்பது தான் எங்க, 'டவுட்!'

அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும்,முதல்வர் ஸ்டாலின் கடிதம்: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களை முற்றிலும் அழித்தாக வேண்டும். இது, அரசியல் பிரச்னை அல்ல. நாட்டின் எதிர்காலம் குறித்த பிரச்னை. குறிப்பாக, இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கை பிரச்னை. தொடர்ச்சியான பிரசாரம் வழியாகவே, போதைப் பொருட்களின் தீமையை உணர்த்த முடியும். அதற்கு மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். போதைப் பாதை அழிவுப் பாதை என்பதை உணர்த்துவோம்.

டவுட் தனபாலு: போதை பொருட்கள் ஒழிப்பில், இவ்வளவு அக்கறையாக இருக்கும் முதல்வருக்கு பாராட்டுகள்... அதேநேரம், 'டாஸ்மாக்' கடைகளில் விற்கப்படுவது எல்லாம், சத்து டானிக்கா என்ற, 'டவுட்' ஏற்படுதே!

தமிழக கவர்னர் ரவி: வரும், 2047ம் ஆண்டில், சுதந்திர தின நுாற்றாண்டை கொண்டாடும் போது, உலகத்திற்கே நம் நாடு தலைமையாக இருக்கும். ஒரு காலத்தில், உணவு பற்றாக்குறை அதிகமாக இருந்தது. தற்போது, நாம் அதை கடந்து விட்டோம். இருப்பினும், பல நீண்ட துாரத்தை கடக்க வேண்டும். பசி மற்றும் நோய்களால் வாடும் மக்கள் இன்றும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் முன்னேற்ற வேண்டும்.

டவுட் தனபாலு: 'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றான் பாரதி... ஒரு பக்கம் குடோன்களில் உணவு தானியங்கள் வீணாகின்றன; மறுபக்கம் பசியால் மக்கள் வாடுகின்றனர் என்றால், வினியோக முறை, 'வீக்'கா இருக்கிறது என்பதில், 'டவுட்'டே இல்லை!

பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா: ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்புள்ள ஈ.வெ.ரா.,சிலைக்கு கீழே, 'கடவுள் இல்லை;கடவுளை கற்பித்தவன் முட்டாள்; கடவுளைபரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டு மிராண்டி' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. 'கோவிலுக்கு முன் இப்படிப்பட்ட வாசகங்களுடன் ஈ.வெ.ரா., சிலைஇருப்பது, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் திட்டமிட்ட செயல். எனவே, இந்த வாசகங்களை நீக்க வேண்டும்.

டவுட் தனபாலு: சிலை விவகாரத்தை விடுங்க... சிலையின் கீழே எழுதப்பட்டுள்ள வாசகங்களில் முதல்வரின் மனைவிக்கும், சமீபத்தில் திருச்செந்துாரில் யாகம் வளர்த்த அவரது மருமகனுக்கும் உடன்பாடு உண்டா, இல்லையா என்பது தான் எங்க, 'டவுட்!'

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X