ரிசர்வ் வங்கி அறிவிப்பை அடுத்துவட்டியை உயர்த்திய வங்கிகள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மும்பை, ஆக. 7-ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக வெளியிட்ட அறிக்கை மையின் ஈரம் காய்வதற்கு முன்னதாக, இரு வங்கிகள் தங்களுடைய வட்டியை அதிகரித்து விட்டதாக அறிவித்துள்ளன.ரிசர்வ் வங்கி அதன் குறுகிய கால கடன்களுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதத்தை, கடந்த 5ம் தேதியன்று50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி அறிவித்தது.இதையடுத்து, தனியார்துறையை சேர்ந்த ஐ.சி. ஐ.சி.ஐ., வங்கி,
ரிசர்வ் வங்கி, அறிவிப்பு,வட்டியை, உயர்த்திய, வங்கிகள்



மும்பை, ஆக. 7-

ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக வெளியிட்ட அறிக்கை மையின் ஈரம் காய்வதற்கு முன்னதாக, இரு வங்கிகள் தங்களுடைய வட்டியை அதிகரித்து விட்டதாக அறிவித்துள்ளன.ரிசர்வ் வங்கி அதன் குறுகிய கால கடன்களுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதத்தை, கடந்த 5ம் தேதியன்று50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி அறிவித்தது.இதையடுத்து, தனியார்துறையை சேர்ந்த ஐ.சி. ஐ.சி.ஐ., வங்கி, பொதுத்துறையை சேர்ந்த 'பஞ்சாப் நேஷனல் வங்கி' ஆகியவைகடனுக்கான வட்டியை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளன.

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, அதன் குறைந்தபட்ச வட்டியை 9.10 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும்; இந்த உயர்வு, 5ம் தேதியிலிருந்து உடனடியாக அமலுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதே போல் பஞ்சாப் நேஷனல் வங்கியும் அதன் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 7.90 சதவீதமாக உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து, வங்கியின் வட்டி விகிதம் 7.40 சதவீதத்திலிருந்து, 7.90 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதாக, பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்து உள்ளது.மேலும் இந்த வட்டி உயர்வு, 8ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.இதன் தொடர்ச்சியாக,வரும் நாட்களில் மற்ற வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X