இன்னும் அலுவலகம் திரும்பாத தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
புதுடில்லி:கொரோனா பரவலும்,அது குறித்த பயமும் குறைந்துவிட்டதை அடுத்து, தொலைதொடர்பு மற்றும் ஆலோசனை துறைகளை சேர்ந்த ஊழியர்களில் பெரும்பாலானவர்கள், அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற துவங்கி விட்டனர். இருப்பினும், தகவல் தொழில்நுட்ப துறையில் நிலை இன்னும் மாறவில்லை. பலர் இன்னும் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்கள்.இது குறித்து, 'கோலி யர்ஸ்' மற்றும் 'அவ்பிஸ்'
இன்னும்,அலுவலகம்,திரும்பாத,தகவல்,தொழில்நுட்ப,ஊழியர்கள்

புதுடில்லி:கொரோனா பரவலும்,அது குறித்த பயமும் குறைந்துவிட்டதை அடுத்து, தொலைதொடர்பு மற்றும் ஆலோசனை துறைகளை சேர்ந்த ஊழியர்களில் பெரும்பாலானவர்கள், அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற துவங்கி விட்டனர்.

இருப்பினும், தகவல் தொழில்நுட்ப துறையில் நிலை இன்னும் மாறவில்லை. பலர் இன்னும் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்கள்.இது குறித்து, 'கோலி யர்ஸ்' மற்றும் 'அவ்பிஸ்' நிறுவனங்கள் கூட்டாக மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:

கடந்த பிப்ரவரியில், கொரோனா மூன்றாவது அலை மட்டுப்பட்டதை அடுத்து, ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றுவது அதிகரிக்க துவங்கியது.இதன் விளைவாக, கடந்த ஜூன் மாத நிலவரப்படி, 34 சதவீத நிறுவனங்களில், 75 முதல் 100 சதவீதம் வரையிலான பணியாளர்கள் அலுவலகம் திரும்பி விட்டனர்.இருப்பினும், 41 சதவீத நிறுவனங்களில், 25 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வருவது ஆய்வில் தெரியவந்தது.

தொலைதொடர்பு துறை, ஆலோசனை துறை ஆகியவற்றில், 75 முதல் 100 சதவீதம் பேர் அலுவலகம் திரும்பிவிட்டனர். ஆனால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களில், அதிகபட்சமாக 25 சதவீதம் பேரே அலுவலகம் திரும்பி உள்ளனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X