ஆகஸ்ட் 7, 1925
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 1925ல் இதே நாளில், மருத்துவர் சாம்பசிவம் - பார்வதி தங்கம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
மருத்துவம் படிக்க நினைத்த இவர், 1942ல், நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தால் மனம் மாறி, கோவை வேளாண் கல்லுாரியில் சேர்ந்தார். டில்லியில், மரபணு பயிர் ஆய்வில் முதுநிலை பட்டமும், கேம்ப்ரிட்ஜ் பல்கலையில், டாக்டர் பட்டமும் பெற்றார். 1960ல், நாட்டில் மீண்டும் பஞ்சம் ஏற்பட்டது. பசியால் மக்கள் மாண்டனர். அமெரிக்காவில் இருந்து, கோதுமையை இறக்குமதி செய்தார் இந்திரா. உலக நாடுகள் கேலி பேசின.
எம்.எஸ்.சுவாமிநாதன், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இங்கு அறிமுகம் செய்து, 200 சதவீத விளைச்சலுடன், 'கோதுமை புரட்சி' காண உதவினார். சீன நெல் ரகங்களை அறிமுகம் செய்து, அரிசி உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறச் செய்தார். கேலி பேசிய நாடுகளுக்கே, உணவு தானியங்களை ஏற்றுமதி
செய்யும் சூழ்நிலையை உருவாக்கி தந்தார். நாட்டின் பல உயரிய பதவிகளை வகித்து, திறம்படசெயல்பட்ட இவர், 1988ல், தன் பெயரில்ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவினார்.உலகின் உயரிய விருதுகளை பெற்றுள்ள இவர், இன்றும் வேளாண் புரட்சிக்கான
ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார். 'பசுமை புரட்சி' நாயகனின், 97வது பிறந்த தினம் இன்று!