அன்னிய முதலீட்டாளர்களுக்காக புதிய குழுவை அமைத்தது 'செபி'

Added : ஆக 06, 2022 | |
Advertisement
புதுடில்லி:அன்னிய முதலீட்டாளர்கள், இந்தியாவில் எளிதாக வணிகம் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக, ஒரு குழுவை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' அமைத்து உள்ளது.இந்த குழு, இந்தியபத்திர சந்தையில், அன்னிய முதலீட்டாளர்கள் பங்கேற்பை ஊக்குவிக்கத் தேவையான ஆலோசனைகளையும் கூடுதலாக வழங்கும். மேலும், இந்திய நிதிச் சந்தைகளில், இத்தகைய
அன்னிய,முதலீட்டாளர்களுக்காக,புதிய குழுவை,அமைத்தது,'செபி'

புதுடில்லி:அன்னிய முதலீட்டாளர்கள், இந்தியாவில் எளிதாக வணிகம் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக, ஒரு குழுவை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' அமைத்து உள்ளது.

இந்த குழு, இந்தியபத்திர சந்தையில், அன்னிய முதலீட்டாளர்கள் பங்கேற்பை ஊக்குவிக்கத் தேவையான ஆலோசனைகளையும் கூடுதலாக வழங்கும். மேலும், இந்திய நிதிச் சந்தைகளில், இத்தகைய முதலீட்டாளர்களின் முதலீடுகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான பிரச்னைகள் குறித்தும்பரிந்துரைகளை வழங்கும்.மொத்தம் 15 உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவுக்கு, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவானது, மேலே குறிப்பிட்ட பணிகளை தவிர, அன்னிய முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு வழிகளை மதிப்பாய்வு செய்வது, அவர்களுக்கான புதிய முதலீட்டு வழிகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனைகளை வழங்குவது ஆகியவற்றையும் மேற்கொள்ளும் என, செபி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன், அன்னிய முதலீட்டாளர்களுக்கான விதிமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கும். கூடவே, அன்னிய முதலீடுகளுக்கான பாதுகாப்பு குறித்த விஷயங்களிலும் கவனம் செலுத்தும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X