அன்னிய செலாவணி இருப்பு மீண்டும் அதிகரிப்பு

Added : ஆக 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த ஜூலை 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உயர்வை எட்டியுள்ளது.கடந்த ஜூலை 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 18 ஆயிரத்து, 289 கோடி ரூபாய் அதிகரித்து, 45.34 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதற்கு முந்தைய வாரத்தில் இருப்பு, 45.15 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.வலுவான
அன்னிய,செலாவணி,இருப்பு,மீண்டும்,அதிகரிப்பு

மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த ஜூலை 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உயர்வை எட்டியுள்ளது.

கடந்த ஜூலை 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 18 ஆயிரத்து, 289 கோடி ரூபாய் அதிகரித்து, 45.34 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதற்கு முந்தைய வாரத்தில் இருப்பு, 45.15 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

வலுவான மூலதன வரவு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஏற்றம் பெற்றது ஆகியவை, அன்னிய செலாவணி உயர காரணமாக அமைந்தது.உக்ரைன் மீது ரஷ்யா போர் துவக்கவும், ரூபாயின் மதிப்பு சரியத் துவங்கியது. இதை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை ரிசர்வ் வங்கி எடுத்ததை அடுத்து, சரிவு கடுமையாக அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது.

'மழை பெய்யும்போது பயன்படுத்துவதற்காகத் தான் குடையை வாங்குகிறோம்' என கூறி, ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க, அன்னிய செலாவணி இருப்பை பயன்படுத்திக் கொள்வதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்கூறியது நினைவுகூரத் தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - thenkaasi,இந்தியா
07-ஆக-202216:00:56 IST Report Abuse
vadivelu அதெல்லாம் நாங்க ஒப்பு கொள்ள மாட்டோம், இலங்கை, வங்க தேசம், பாகிஸ்தான் நாடுகள் தான் இந்தியாவை விட வலிமையான நாடுகள் என்று கம்யூனிஸ்டுகளும், பா ஜா கா அல்லாத மற்ற கட்சிகளும் சொல்வதைத்தான் நம்புவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X