30 ஆண்டாக ஓடையை கடக்க உதவும் கயிறுபாலம் கட்டித்தருவதில் அதிகாரிகள் அலட்சியம்| Dinamalar

30 ஆண்டாக ஓடையை கடக்க உதவும் கயிறுபாலம் கட்டித்தருவதில் அதிகாரிகள் அலட்சியம்

Added : ஆக 06, 2022 | |
சாம்ராஜ்நகர்-ஹனுரின், புட்டேகவுடனதொட்டி கிராமத்தின் ஓடையில், தொடர் மழையால் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. மழை வந்தால் கிராமத்தினர், ஓடையை தாண்ட கயிறை பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் பெற்றோரின் தோளில் அமர்ந்து, பயத்துடன் செல்கின்றனர்.சாம்ராஜ்நகர், ஹனுரின் புட்டகவுடனதொட்டி கிராமத்தினர், மழை பெய்தால் தண்ணீரிலேயே வாழ்க்கை நடத்தும் நிர்பந்தம் ஏற்படுகிறது. பாலம்சாம்ராஜ்நகர்-ஹனுரின், புட்டேகவுடனதொட்டி கிராமத்தின் ஓடையில், தொடர் மழையால் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. மழை வந்தால் கிராமத்தினர், ஓடையை தாண்ட கயிறை பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் பெற்றோரின் தோளில் அமர்ந்து, பயத்துடன் செல்கின்றனர்.சாம்ராஜ்நகர், ஹனுரின் புட்டகவுடனதொட்டி கிராமத்தினர், மழை பெய்தால் தண்ணீரிலேயே வாழ்க்கை நடத்தும் நிர்பந்தம் ஏற்படுகிறது. பாலம் கட்டித்தரும்படி 30 ஆண்டுகளாக மன்றாடியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. இவர்களின் அலட்சியத்தால், கிராமத்தினர் இப்போதும் ஓடையை கடக்க, கயிறை பயன்படுத்துகின்றனர். ஓடையின் இரண்டு ஓரத்தில், இளைஞர்கள் கயிறை பிடித்தபடி நிற்பர்.பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளை, தோள் மீது சுமந்து கொண்டு, கயிற்றை பிடித்தபடி நகர்ந்து ஓடையை கடக்கின்றனர். உடல் நிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் இப்படித்தான் சுமந்து வருகின்றனர்.ஓடைக்கு அப்பால் உள்ள, புட்டேகவுடனஹள்ளியில், 100 வீடுகள் உள்ளன. 600 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. பள்ளி, மருத்துவமனை, மளிகைப்பொருட்கள் என, எந்த தேவைக்கும் 100 அடி நீளமான ஓடையை தாண்டி, மீன்யம் கிராமத்துக்கு வர வேண்டும். மழை பெய்யும் போது, உயிரை கையில் பிடித்துக்கொண்டு, ஓடையை தாண்டுகின்றனர்.இரண்டு வாரமாக, மழை பெய்வதால் ஓடையில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. மரம், செடி, கொடிகள் மிதந்து வருகிறது. ஓடையை தாண்டும் போது, மரம் குறுக்கே வந்தால் அவர்களின் நிலை அவ்வளவுதான். கிராமத்துக்கு பாலம் கட்டித்தர வேண்டும் அல்லது தற்காலிக வசதியாவது செய்து தரும்படி, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X