வேளாண் பல்கலைக்கு ரூ.5 லட்சம் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோவை:வேளாண் பல்கலையில், 41 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவர்கள் ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கினர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், கடந்த, 1978 - -81ம் ஆண்டு , வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பல்கலை வளாகத்தில் சந்தித்து, தங்களது கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விழாவில், பழைய மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கால 'டேட்லர்' என்ற பத்திரிகையை

கோவை:வேளாண் பல்கலையில், 41 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவர்கள் ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கினர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், கடந்த, 1978 - -81ம் ஆண்டு , வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பல்கலை வளாகத்தில் சந்தித்து, தங்களது கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விழாவில், பழைய மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கால 'டேட்லர்' என்ற பத்திரிகையை தற்காலத்திற்கு தகுந்தவாறு, மறு உருவாக்கம் செய்தனர். பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார். விழாவில், முன்னாள் மாணவர்கள் தாங்கள் திரட்டிய ரூ.5 லட்சத்தை வழங்கினர். இந்நிதியிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு, ஏழை மாணவர்களின் கல்விக்கு 'உதவித் தொகை' வழங்க, முடிவு செய்துள்ளனர்.விழாவில், 54 முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். இந்தியா மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து நாட்டிலிருந்தும் வந்து பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X