அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில்,

திருவள்ளூர்:வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்தும், ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், 3,657 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்கள் வீடு வீடாக சென்று ஆதார் எண் விபரங்களை படிவம் '-6பி'ல் வாக்காளர் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் வீடு தேடி வரும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் தங்கள் ஆதார் எண்ணை படிவம் '6பி'யில் தெரிவிக்கலாம்.வாக்காளர் சேவை மையம், இ- - சேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும், வாக்காளர்கள் நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் படிவம் 6பி - 'I Elector- facing Portal / Apps Like NVSP,VHA' ஆகியவற்றில் 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இருப்பின் அவர்களிடமிருந்து இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை பெற்று இணைக்கப்பட வேண்டும்.இதற்கு, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளி, தனி வட்டாட்சியர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X