நீரில் மூழ்கி விவசாயி பலி
பெங்களூரு ரூரல், தொட்டபல்லாபூரின், கோனகட்டா கிராமத்தில் வசித்த விவசாயி கிருஷ்ணப்பா, 70. நேற்று முன் தினம் மதியம், லட்சுமி பூஜைக்கு பூப்பறிக்க, ஏரிக்கு சென்ற போது, தவறி விழுந்து உயிரிழந்தார். இரவாகியும் வீடு திரும்பாததால், அவரை தேடிய போது ஏரிக்கரையில் உடை, செருப்பு இருப்பது தெரிந்தது. நேற்று காலை அவரது உடல் வெளியே எடுக்கப்பட்டது.
சாலை விபத்தில் ஒருவர் பலி
தாவணகரேவின், தேசிய நெடுஞ்சாலையின், குந்தவாடாவில், ஜினிசிஸ் சொகுசு விடுதி அருகில், நேற்று முன் தினம் இரவு, லாரியும், மினி பஸ் நேருக்கு மோதிக்கொண்டது. மினி பஸ்சிலிருந்த ஆனந்த கவுடா பாட்டீல், 38, உயிரிழந்தார்.
பூச்சிக்கொல்லி மருந்துகள் மீட்பு
யாத்கிர், சஹாபுராவின், மடிவாளேஸ்வரா நகரின் வீடொன்றில், சட்டவிரோதமாக பூச்சிக்கொல்லி மருந்துகள் பதுக்கப்பட்டதாக தகவல் வந்தது. நேற்று மதியம் அங்கு சென்று, சோதனையிட்ட போலீசார், விவசாயத்துறை அதிகாரிகள், 2.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் மீட்கப்பட்டது. பாளப்பா சத்ரப்பா சலவாதி, 45, என்பவர் கைது செய்யப்பட்டார்.
வாகனம் மோதி தலைமை ஆசிரியர் பலி
ஷிவமொகா, தீர்த்தஹள்ளியின், கட்டேஹக்லு அருகில் நேற்று மதியம் சென்ற பைக் மீது, ஆம்னி வேன் மோதியது. பைக்கில் இருந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ், 51, உயிரிழந்தார்.
வீட்டின் சுவரில் மோதிய கார்
சிக்கமகளூரு, பாளஹொன்னுரின், சாந்திபுராவில் நேற்று மதியம் சென்ற காரொன்று, கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. அதன்பின் வீட்டின் சுவர் மீது மோதியது. வீட்டிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பைக் ஓட்டுனர் காயமடைந்து சிகிச்சை பெறுகிறார்.
நபர் தற்கொலை
சிக்கமகளூரின், கொட்டிகேஹாரா அருகில், அத்திகெரே கிராமத்தில் வசித்தவர் சுலிபைல் அந்தோணி, 38. இவர் நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டிராக்டர் மோதி, பைக் பயணி பலி
மாண்டியா, மளவள்ளியின், டி.காகேபுரா கேட் அருகில், நேற்றிரவு சென்ற பைக் மீது, டிராக்டர் மோதியது. பைக்கிலிருந்த ராஜேஷ், 43, உயிரிழந்தார்.