குறை சொல்ல வாய்ப்பு இல்லை; உபதேசம் செய்த அதிகாரிகள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
தங்கவயல்--தங்கவயலில் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் மக்கள் குறை சொல்ல வாய்ப்பு அளிக்காமல் அரசு திட்டங்களை அதிகாரிகளை வைத்து விளக்கும் நிகழ்ச்சியாக மாற்றி விட்டனர்.தங்கவயல் நகராட்சி பகுதிகளான 35 வார்டுகளிலும் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி, காங்கிரஸ் எம்.எல்.ஏ., நடத்துவதாக அறிவித்திருந்தார். இதனால், மக்கள் தங்களின் பிரச்னைகளை தெரிவித்து பயன் பெற முடியும்



தங்கவயல்--தங்கவயலில் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் மக்கள் குறை சொல்ல வாய்ப்பு அளிக்காமல் அரசு திட்டங்களை அதிகாரிகளை வைத்து விளக்கும் நிகழ்ச்சியாக மாற்றி விட்டனர்.தங்கவயல் நகராட்சி பகுதிகளான 35 வார்டுகளிலும் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி, காங்கிரஸ் எம்.எல்.ஏ., நடத்துவதாக அறிவித்திருந்தார். இதனால், மக்கள் தங்களின் பிரச்னைகளை தெரிவித்து பயன் பெற முடியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.நேற்று நடந்த முதல் நாள் நிகழ்ச்சி நகராட்சியின் 3 வது பாலக்காடு வார்டின் என்.டி.பிளாக் பகுதியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. தலைமை வகித்த, தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, தனது நான்கு ஆண்டுகளில் செய்த சேவைகளை, செய்ய உள்ள விபரங்களை பல இடங்களில் தெரிவித்ததையேதெரிவித்தார்.மக்கள் குறைதீர் நிகழ்ச்சியாக இல்லாமல் தொகுதியின் நகர மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியாக இருந்தது.மக்கள் குறைதீர் நிகழ்ச்சியில் குறையோடு வந்தவர்களின் குறையை கேட்கவில்லை. அவர்கள், 'ஏதோ வந்தோம். விண்ணப்பங்கள் கொடுத்தனர்; வாங்கிக்கொண்டோம்,' என கூறுவதையே கேட்க முடிந்தது.பிரச்னைகளை கூற வாய்ப்பளிக்கப்படவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு;அங்கன்வாடி முறைகேடு; ரேஷன் பொருட்கள் கிடைக்காதது; வீட்டில் ஒருத்தருக்கு தான் கல்வி உதவித்தொகை என்றால் மற்ற பிள்ளை படிக்க கூடாதா என்ற கேள்வி; மருத்துவ வசதி; சுகாதார சீர்கேடு; வீட்டுரிமை பட்டா; புதிய வேலை வாய்ப்பு திட்டம் என எக்கச்சக்கமான கேள்விகளோடு வந்தவர்கள் வாயடைத்து போயினர்.அதிகாரிகளுக்கு பேச ஒதுக்கிய நேரத்தை, குறையை சொல்ல மக்களுக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால், செய்ய தவறி விட்டனர்.லேபர் கார்டு பதிவு; ஆஷ்ரியா விண்ணப்பம்; மின் சலுகை விண்ணப்பம் பெறுவதற்கான தள்ளு முள்ளு நிகழ்ச்சியுடனும் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.பிற்பகல் 3:00 மணிக்கு எஸ்.டி.பிளாக் வார்டில் நிகழ்ச்சி துவங்கியது. மழை பாதிப்பால் தடைபட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X