கல்லூரி மாணவர்கள் கத்திக்குத்து:15 பேர் மீது கொலை முயற்சி வழக்கு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோவை:போதை மாத்திரை விற்பனையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், கோவை கல்லுாரி மாணவர்கள் மூவருக்கு கத்திக்குத்து விழுந்தது. விசாரித்த போலீசார் மாணவர்கள் 15 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்துள்ளனர்.கோவை கல்லுாரி மாணவர்கள் மத்தியில், கஞ்சா, போதை மாத்திரைகள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதை வஸ்துகளை பயன்படுத்தும் மாணவர்கள், அடுத்த கட்டமாக செயின் பறிப்பு, வாகன

கோவை:போதை மாத்திரை விற்பனையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், கோவை கல்லுாரி மாணவர்கள் மூவருக்கு கத்திக்குத்து விழுந்தது. விசாரித்த போலீசார் மாணவர்கள் 15 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்துள்ளனர்.கோவை கல்லுாரி மாணவர்கள் மத்தியில், கஞ்சா, போதை மாத்திரைகள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதை வஸ்துகளை பயன்படுத்தும் மாணவர்கள், அடுத்த கட்டமாக செயின் பறிப்பு, வாகன திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், போலீஸ் தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. கல்லுாரி நிர்வாகத்தினர், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மாணவர்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக, கல்லுாரி நிர்வாகத்தினருக்கும் போலீஸ் தரப்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.'கல்லுாரி வளாகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களின் புழக்கத்தை கட்டுப்படுத்துவது, கல்லுாரி நிர்வாகத்தினரின் பொறுப்பு.தவறும் பட்சத்தில், போலீஸ் நேரடியாக கல்லுாரிகள், விடுதிகளில் சோதனை நடத்தும். போதை வஸ்துக்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மட்டுமின்றி, கல்லுாரி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்நிலையில், கோவை அவிநாசி ரோடு தனியார் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள், போதை மாத்திரை விற்பனை செய்வது தொடர்பாக இரு கோஷ்டிகளாக பிரிந்து, நேருக்குநேர் மோதிக் கொண்டனர். இதில் இரு தரப்பினரும் எதிர் தரப்பினரை, கத்தி, இரும்புக்கம்பிகளால் தாக்கிக்கொண்டனர்.இதில், மூன்று மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.
மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடையாம்பாளையம் சவுரிபாளையம் ரோட்டில் 3ம் தேதியும், மசக்காளிபாளையம் ஆண்டாள் நகரில் 5ம் தேதியும் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.விசாரணை நடத்திய சிங்காநல்லுார் மற்றும் பீளமேடு போலீசார், இரு தரப்பிலும் சேர்ந்து 15 மாணவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர். இதில் மூன்றாம் ஆண்டு, கோஷ்டி மீது கொலை முயற்சி உள்ளிட்ட 9 பிரிவுகளிலும், இரண்டாம் ஆண்டு கோஷ்டியினர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளிலும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கல்லுாரி மாணவர்கள் கோஷ்டி சேர்ந்து, போதை மாத்திரை விற்பனை செய்ததும், அதற்காக கத்திக்குத்து போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதும், போலீசார்மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X