கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம்:வாசன் வலியுறுத்தல்| Dinamalar

கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம்:வாசன் வலியுறுத்தல்

Added : ஆக 06, 2022 | |
சென்னை:'புதிய புறநகர் பஸ் நிலையம் அமைந்துள்ள கிளாம்பாக்கத்தில், ரயில் நிலையம் அமைக்க வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், 44.75 ஏக்கரில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.அரசு புறநகர் பஸ்கள், ஆம்னி பஸ்கள், மாநகர பஸ்கள் அனைத்தும், ஒரே இடத்தில்

சென்னை:'புதிய புறநகர் பஸ் நிலையம் அமைந்துள்ள கிளாம்பாக்கத்தில், ரயில் நிலையம் அமைக்க வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், 44.75 ஏக்கரில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.அரசு புறநகர் பஸ்கள், ஆம்னி பஸ்கள், மாநகர பஸ்கள் அனைத்தும், ஒரே இடத்தில் இயங்கும் வகையில், அனைத்து வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
'செங்கல்பட்டில் இருந்து வரும் பஸ்கள், ஜி.எஸ்.டி., சாலையை கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில், ரயில் நிலையம் அமைக்க வேண்டும். இல்லையெனில், வண்டலுார் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில், அனைத்து ரயில்களும் நின்று செல்லும் வகையில் விரிவுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X