சமத்துவபுரம் பயனாளிகள் மாற்றம் ராமசமுத்திரம் மக்கள் சாலை மறியல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
பொதட்டூர்பேட்டை:சமத்துவபுரம் குடியிருப்புகள் ஒதுக்கீடு பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமசமுத்திரம் ஊராட்சியில், 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமத்துவபுரம், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.தற்போது, இந்த குடியிருப்புகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.
சமத்துவபுரம் பயனாளிகள் மாற்றம் ராமசமுத்திரம் மக்கள் சாலை மறியல்

பொதட்டூர்பேட்டை:சமத்துவபுரம் குடியிருப்புகள் ஒதுக்கீடு பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமசமுத்திரம் ஊராட்சியில், 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமத்துவபுரம், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.தற்போது, இந்த குடியிருப்புகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்த பயனாளிகளில் ஒரு சிலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, ராமசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதட்டூர்பேட்டையில் இருந்து, திருத்தணி செல்லும் சிறுகுமி கூட்டு சாலையில் நடந்த மறியல் போராட்டத்தில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் பொதட்டூர்பேட்டை போலீசார், பொதுமக்களை சமரசம் செய்தனர். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X