குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்கேளம்பாக்கத்தில் விழிப்புணர்வு பேரணி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருப்போரூர்:கேளம்பாக்கம் ஊராட்சியில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் குறித்து, பெண்கள் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சி, சமூக நலக்கூடத்தில், திருப்போரூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி, நடந்தது.ஊராட்சி தலைவர் ராணி
குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்கேளம்பாக்கத்தில் விழிப்புணர்வு பேரணி

திருப்போரூர்:கேளம்பாக்கம் ஊராட்சியில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் குறித்து, பெண்கள் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சி, சமூக நலக்கூடத்தில், திருப்போரூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி, நடந்தது.
ஊராட்சி தலைவர் ராணி குத்துவிளக்கு ஏற்றி, துவக்கி வைத்தார். படூர் தனபாலன் கல்லுாரியின் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை பிரிவு பயிற்சி மாணவர்கள், தாய்ப்பாலின் நன்மைகள், ஊட்டச்சத்துகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் பாலுாட்டும் முறை, தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும், தாய்க்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர்.
ஊட்டச்சத்து சார்ந்த உணவு பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து தாய்ப்பால் தருவது குறித்து, 50 பெண்கள் உட்பட அனைவருக்கும் உறுதிமொழி ஏற்றனர். திருப்போரூர் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரி மாணவர்கள் சார்பில், தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இங்கிருந்து கேளம்பாக்கம் வீராணம் சாலை, மார்க்கெட் சாலை, தையூர் சாலை வழியாக சென்று, கல்லுாரியை மீண்டும் அடைந்தது.பேரணியில், 500 மாணவ - மாணவியர் பங்கேற்று, தாய்ப்பால் அவசியம் குறித்து எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X