குடிநீர் கேட்டு சாலை மறியல்பஸ்சை சிறை பிடித்த மக்கள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, ஓபசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது குழிநாவல் கிராமம். பழவேற்காடு ஏரியை ஒட்டியுள்ள இந்த கிராமத்திற்கு, 'பைப் லைன்' மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.பைப் லைனில் ஏற்பட்ட பழுது காரணமாக, ஒரு வாரமாக, முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார்
குடிநீர் கேட்டு சாலை மறியல்பஸ்சை சிறை பிடித்த மக்கள்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, ஓபசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது குழிநாவல் கிராமம். பழவேற்காடு ஏரியை ஒட்டியுள்ள இந்த கிராமத்திற்கு, 'பைப் லைன்' மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.பைப் லைனில் ஏற்பட்ட பழுது காரணமாக, ஒரு வாரமாக, முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கிராம பெண்கள் சிலர், அவ்வழியாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில், நேற்று ஈடுபட்டனர்.கும்மிடிப்பூண்டி தாசில்தார் கண்ணன் நேரில் சென்று சமாதானம் பேசினார். விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

உடனடி தேவைக்காக, டேங்கர் வாகனம் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சமாதானம் அடைந்த கிராம மக்கள் பேருந்தை விடுவித்து கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X