சென்னை: ""நாட்டின் தலைநகரான டில்லியில் குண்டு வெடித்திருப்பது, கேட்பதற்கே வேதனையாக உள்ளது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கருணாநிதி கூறும்போது, ""பாதுகாப்பற்ற நிலையில் நாட்டின் தலைநகரம் இருக்கக் கூடாது. ஏற்கனவே, பார்லிமென்ட் அருகே இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது. இப்போது, ஐகோர்ட்டுக்கு அருகில் நடந்துள்ளது. நாட்டின் தலைநகரம் டில்லி. அங்கேயே இப்படிப்பட்ட சூழ்நிலை என்றால், கேட்பதற்கே, படிப்பதற்கே வேதனையாக இருக்கிறது,'' என்று தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியளிக்கிறது: வைகோ : "டில்லி ஐகோர்ட் ஐந்தாவது வாயிலில் குண்டு வெடித்து சிலர் பலியாகி, பலர் படுகாயமுற்றள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்த கொடூர வன்செயலில் ஈடுபட்டவர்களுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலியும், காயமுற்றவர்கள் பூரண குணமடையவும் வேண்டிக் கொள்கிறோம்' என, வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE