கரிக்கலாம்பாக்கத்தில் நாளை நெல் திருவிழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
புதுச்சேரி-கரிக்கலாம்பாக்கத்தில் வரும் 8 ம் தேதி நெல் திருவிழா நடக்கிறது.இதுகுறித்து வேளாண் துறை கூடுதல் இயக்குனர் வசந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை சார்பில் நாளை 8ம் தேதி காலை 10 மணிக்கு கரிக்கலாம்பாக்கம் புஷ்பா திருமண மண்டபத்தில் நெல் திருவிழா நடக்கிறது.வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைக்கிறார். விழாவில்



புதுச்சேரி-கரிக்கலாம்பாக்கத்தில் வரும் 8 ம் தேதி நெல் திருவிழா நடக்கிறது.இதுகுறித்து வேளாண் துறை கூடுதல் இயக்குனர் வசந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை சார்பில் நாளை 8ம் தேதி காலை 10 மணிக்கு கரிக்கலாம்பாக்கம் புஷ்பா திருமண மண்டபத்தில் நெல் திருவிழா நடக்கிறது.வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைக்கிறார். விழாவில் லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., வேளாண் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி விவசாய கண்காட்சி நடக்கிறது. பாரம்பரிய நெல் ரகங்கள், அதன் குணங்கள், உயிரக உரங்கள், இயற்கை உற்பத்தி பொருட்கள், நவீன தொழில்நுட்ப கருவிகள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.விழாவில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கருப்பு கவுனி, செங்கல்பட்டு சிறுமணி, கருடன் சம்பா அடங்கிய 2 கிலோ மினி கிட்டுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கடந்த தை பருவத்தில் நடத்தப்பட்ட நெல் திருவிழாவைபோன்று தற்போதைய நடப்பு சம்பா பருவத்திற்காக இந்த நெல் திருவிழா நடத்தப்படுகிறது.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X