பச்சைவாழியம்மன் கோவிலில் 12ம் தேதி தீமிதி திருவிழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
பாகூர்-கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவிலில் வரும் 12ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.புதுச்சேரி அடுத்த கன்னியக்கோவிலில், பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், தீமிதி திருவிழா கடந்த ௪ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனையொட்டி அன்று மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து



பாகூர்-கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவிலில் வரும் 12ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.புதுச்சேரி அடுத்த கன்னியக்கோவிலில், பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், தீமிதி திருவிழா கடந்த ௪ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனையொட்டி அன்று மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றி, மகா தீபாராதனை நடைபெற்றது.விழாவில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., உபய தாரர் முன்னாள் எம்.எல்.ஏ., தனவேலு குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முக்கிய விழாவான தீமிதி திருவிழா, வரும் 12ம் தேதி மாலை 5.00 மணிக்கு நடக்கிறது. அன்று மதியம் 12.00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், 13ம் தேதி தெப்பல் உற்சவம், 14ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X