70 கொசு ஒழிப்பு பணியாளர்கள்3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகரில், கொசு புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள, 70 பணியாளர்களுக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே., நகர், நத்தம், வேதாசலம் நகர், அழகேசன் நகர், அனுமந்தபுத்தேரி அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்து, 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் மழை நீர் கால்வாய், வீடுகளில் கொசுக்கள் வளர்வதை தடுக்கவும், நோய் தொற்று பரவாமல்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகரில், கொசு புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள, 70 பணியாளர்களுக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே., நகர், நத்தம், வேதாசலம் நகர், அழகேசன் நகர், அனுமந்தபுத்தேரி அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்து, 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் மழை நீர் கால்வாய், வீடுகளில் கொசுக்கள் வளர்வதை தடுக்கவும், நோய் தொற்று பரவாமல் இருக்கவும், கொசு ஒழிப்பு பணி மேற்கோள்ள, 70 பணியாளர்கள் நகராட்சியில் தற்கலிகமாக நியமிக்கப்பட்டனர்.
அவர்களின் பணி காலம் முடிகிறது.இதனால், பொது சுகாதார பிரிவில் தொய்வின்றி பணிகள் நடக்கவும், நிர்வாக நலன் கருதியும், மேலும் மூன்று மாதங்களுக்கு இவர்களின் பணியை நீட்டிக்க, தனியார் நிறுவனத்திற்கு 27 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள, நகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, கொசு ஒழிப்பு பணியில் தற்காலிக பணியாளர் ஈடுபட, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X