திருக்கோவிலூரில் திரிந்த மாடுகள்; சிறை பிடித்த நகராட்சி ஊழியர்கள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருக்கோவிலுார்-திருக்கோவிலுாரில் சாலைகளில் திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் சிறை பிடித்தனர்.திருக்கோவிலுார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடு வளர்ப்பவர்கள் கட்டி வைத்து பராமரிக்காமல், மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர். முக்கிய சாலைகளில் மாடுகள் திரிவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.



திருக்கோவிலுார்-திருக்கோவிலுாரில் சாலைகளில் திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் சிறை பிடித்தனர்.திருக்கோவிலுார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடு வளர்ப்பவர்கள் கட்டி வைத்து பராமரிக்காமல், மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர். முக்கிய சாலைகளில் மாடுகள் திரிவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக நகரில் சுற்றித் திரிந்த 10க்கும் மேற்பட்ட மாடுகளை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா மேற்பார்வையில், துப்புரவு மேற்பார்வையாளர் செந்தில் தலைமையில் துாய்மைப் பணியாளர்கள் சிறை பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டி வைத்து வருகின்றனர்.மாட்டின் உரிமையாளர்கள், இனி தெருக்களில் மாடுகளை அவிழ்த்து விட மாட்டோம் என உறுதிமொழி எழுதி கொடுத்துவிட்டு ஓட்டிச் சென்றனர். இனிவரும் நாட்களில் மாடுகள் சாலையில் திரிந்தால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X