மணல் கடத்திய 2 டிராக்டர் பறிமுதல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருக்கோவிலுார்-அரகண்டநல்லுார் அடுத்த காடகனுாரில், மணல் திருட்டுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.அரகண்டநல்லுார் அடுத்த காடகனுாரில் ஓடையில் இருந்து டிராக்டர்களை மூலம் மணல் எடுத்து பதுக்கி விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அரகண்டநல்லுார் போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, காலி மனையில் ஓடையில்



திருக்கோவிலுார்-அரகண்டநல்லுார் அடுத்த காடகனுாரில், மணல் திருட்டுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.அரகண்டநல்லுார் அடுத்த காடகனுாரில் ஓடையில் இருந்து டிராக்டர்களை மூலம் மணல் எடுத்து பதுக்கி விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அரகண்டநல்லுார் போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, காலி மனையில் ஓடையில் இருந்து கடத்தி வரப்பட்ட மணல் குவித்து வைத்திருப்பது தெரியவந்தது.விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த செல்வகுமார், 32; சுந்தரமூர்த்தி, 47; ஆகியோர் மணல் கடத்தி சேமித்து வைத்திருப்பது தெரியவந்தது. உடன் போலீசார், அங்கிருந்த 2 டிராக்டர் டிப்பர்களையும் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X