உயரம் குறைவான மீடியனால் தொடரும் விபத்துகள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:தேசிய நெடுஞ்சாலையில், வாகனம் திரும்புவதற்கு வசதியாக போடப்பட்டுள்ள மீடியனின் உயரம் குறைவாக இருப்பதால், செங்கல்பட்டில் தொடர்ந்து விபத்து நடக்கிறது.சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பச்சையம்மன் கோவில் பகுதியில், செங்கல்பட்டு பகுதிக்கு வாகன ஓட்டிகள் திரும்பும் வகையில், இரு சாலையாக பிரித்து, நெடுஞ்சாலைத் துறையினர் மீடியன்

செங்கல்பட்டு:தேசிய நெடுஞ்சாலையில், வாகனம் திரும்புவதற்கு வசதியாக போடப்பட்டுள்ள மீடியனின் உயரம் குறைவாக இருப்பதால், செங்கல்பட்டில் தொடர்ந்து விபத்து நடக்கிறது.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பச்சையம்மன் கோவில் பகுதியில், செங்கல்பட்டு பகுதிக்கு வாகன ஓட்டிகள் திரும்பும் வகையில், இரு சாலையாக பிரித்து, நெடுஞ்சாலைத் துறையினர் மீடியன் அமைத்துள்ளனர்.இந்த மீடியனின் உயரம் குறைவாக, தரையை ஒட்டி உள்ளதால், வாகன ஓட்டிகளின் கண்களுக்கு தெரிவதில்லை. அதனால் அவ்வபோது, வாகனங்கள் இந்த மீடியனில் மோதி விபத்துக்குள்ளாகின்றன.
அதேபோல், இங்கே சாலையை கடக்கும் பாதசாரிகளும் விபத்தில் சிக்குகின்றனர். இங்குள்ள தானியங்கி சிக்னலும் இயங்குவதில்லை.எனவே, இப்பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்க, மீடியனின் உயரத்தை அதிகரிக்கவும், தானியங்கி சிக்னலை முறையாக இயக்கவும், நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை தேவை என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X