கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கச்சிராயபாளையம்-கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் இந்தியன் வங்கி கடலுார் மண்டலம் சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் மாத்துாரில் நடந்தது.முகாமிற்கு துணை மண்டல மேலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி, உதவி இயக்குனர் சுதா, ஊராட்சி தலைவர் உமாராஜன் முன்னிலை வகித்தனர். இந்தியன் வங்கி கிளை மேலாளர் பிரவின்குமார்



கச்சிராயபாளையம்-கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் இந்தியன் வங்கி கடலுார் மண்டலம் சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் மாத்துாரில் நடந்தது.முகாமிற்கு துணை மண்டல மேலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி, உதவி இயக்குனர் சுதா, ஊராட்சி தலைவர் உமாராஜன் முன்னிலை வகித்தனர். இந்தியன் வங்கி கிளை மேலாளர் பிரவின்குமார் வரவேற்றார்.முகாமில் கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, அடைப்பான் நோய் தடுப்பூசி, கண்பரிசோதனை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. டாக்டர்கள் சயத்அஷ்ரப், நிர்மலா தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், துணைத் தலைவர் அலமேலு வீரமணி, கச்சிராயபாளையம் பகுதி வணிக வங்கி தொடர்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X