சுதந்திர தின விழா குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், சுதந்திரதின விழா குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். எஸ்.பி., பகலவன் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., விஜய்பாபு, ஏ.டி.எஸ்.பி., ஜவஹர்லால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், டி.எஸ்.பி., புகழேந்தி கணேசன், வேளாண் இணை இயக்குனர் வேல்விழி, சி.இ.ஓ., விஜயலட்சுமி,



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், சுதந்திரதின விழா குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். எஸ்.பி., பகலவன் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., விஜய்பாபு, ஏ.டி.எஸ்.பி., ஜவஹர்லால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், டி.எஸ்.பி., புகழேந்தி கணேசன், வேளாண் இணை இயக்குனர் வேல்விழி, சி.இ.ஓ., விஜயலட்சுமி, ஆர்.டி.ஓ.,க்கள் பவித்ரா, யோகஜோதி உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், தமிழக அரசு அறிவுறுத்தலின் படி, 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி, மாவட்டத்தில் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை சுதந்திர தின வாரமாக கடைபிடித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்படும். சுதந்திர போராட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஏற்படுத்திடும் பொருட்டு, போட்டிகள் நடத்தி சுதந்திர தின விழாவில் பரிசு வழங்க வேண்டும்.மேலும், 11 முதல் 17ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் 15ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது.இதற்காக மைதானம் சீரமைத்தல், மேடை, பந்தல் அமைத்தல், போலீஸ் பாதுகாப்பு, குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிடம் அமைத்தல், மருத்துவ முகாம் ஆகிய பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுதவிர, சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெறும் மைதானம் அருகே 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துதல், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அரசு பணியாளர்களுக்கு நற்பணியாளர் சான்றிதழ் வழங்குதல் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.மேலும், அவரவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை சிறப்புடன் செய்து சுதந்திர தின விழாவை வெகுசிறப்பாக கொண்டாட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X