கூடுவாஞ்சேரி :வாடகை நிலுவை, கடைகள் ஏலத்தில் வசூல் நகராட்சிக்கு ரூ.3 கோடி கிடைத்தது

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - -கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட கடைகள், ஏலம் விடப்பட்டன.நந்திவரம் - -கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு சொந்தமான, பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், கட்டண கழிப்பறைகள், கழிவு நீர் அகற்றுதல், 14 புதிய கடைகள், இறைச்சி கடைகள் ஏலம், இரு நாட்களாக நடந்தது.முன்பணம் செலுத்தியிருந்தோர், ஏலத்தில் பங்கேற்றனர்.கமிஷனர் இளம்பரிதி, நகராட்சி தலைவர் கார்த்திக் ஆகியோர்

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - -கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட கடைகள், ஏலம் விடப்பட்டன.
நந்திவரம் - -கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு சொந்தமான, பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், கட்டண கழிப்பறைகள், கழிவு நீர் அகற்றுதல், 14 புதிய கடைகள், இறைச்சி கடைகள் ஏலம், இரு நாட்களாக நடந்தது.முன்பணம் செலுத்தியிருந்தோர், ஏலத்தில் பங்கேற்றனர்.
கமிஷனர் இளம்பரிதி, நகராட்சி தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில், கடைகள் ஏலம் துவங்கப்பட்டது.ஏற்கனவே கடையை நடத்தி வருவோரே, இம்முறையும் ஏலம் எடுத்தனர். முன்பணம் கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய், வாடகையில் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
டீ கடை மற்றும் உணவகங்களுக்கு, கூடுதலாக வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, கடைகளை ஏலம் எடுத்தோர் குற்றம் சாட்டினர்.கமிஷனர் இளம்பரிதி கூறியதாவது: கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு சொந்தமான 165க்கும் மேற்பட்ட கடைகளில், எட்டு ஆண்டு களாக கோடி ரூபாய் நிலுவை பாக்கி வைத்திருந்தனர்.
டிசம்பர் மாதம் முதல், நான் பதவியேற்ற நாள் வரை, 2.10 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. வாடகை நிலுவை கட்டாத 12 கடைகளுக்கு பூட்டி 'சீல்' வைக்கப்பட்டுஉள்ளது.மேலும், பல ஆண்டுகளாக பொது ஏலம் விடாத அனைத்து நகராட்சி கடைகளும், இரு நாட்களுக்கு முன் ஏலம் விடப்பட்டன.
இதில், கடைக்காரர்களிடமிருந்து 'டிபாசிட்' தொகையாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால், நகராட்சி கூடுதல் வருமானம் வந்துள்ளது.இந்த பொது ஏலத்தில், பேருந்து நிலைய கட்டண கழிப்பறை, தினசரி அங்காடி கடைகள் உள்ளிட்டவை விடப்பட்டன.கழிவு நீர் ஊர்தி, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்த 'பார்க்கிங்' மற்றும் நகராட்சிக்கு சொந்தமான 130 கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளன. ஏலம் விடப்படாத இடங்களுக்கு மீண்டும் ஏலம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X