செராமிக் தொழிற்பேட்டையில் அமைச்சர்கள் கலந்துரையாடல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளர் அருண்ராய், மேலாண்மை இயக்குனர் ஆனந்த், சப் கலெக்டர் பழனி, சேர்மன் சங்கவி, துணை சேர்மன் ராணி முன்னிலை வகித்தனர். ராதாகிருஷ்ணன்

விருத்தாசலம்-விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளர் அருண்ராய், மேலாண்மை இயக்குனர் ஆனந்த், சப் கலெக்டர் பழனி, சேர்மன் சங்கவி, துணை சேர்மன் ராணி முன்னிலை வகித்தனர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வரவேற்றார்.கூட்டத்தில், பீங்கான் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பரசன் பேசுகையில், 'இங்குள்ள ஆக்கிரமிப்புகளை நெறிமுறைப்படுத்தி, தகுந்த வாடகை வசூலிப்பு பணிகள் நடைபெறும்.ஒருவரே அனுபவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது, அதை முறைப்படுத்தி அனைவரும் பயனடையும் வகையில் மாற்றம் செய்யப்படும். 2.50 கோடி ரூபாயில் கில்லன் புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. இது அனைத்து உற்பத்தியாளர்களும் பயனடையும் வகையில் மாற்றம் செய்யப்படும்' என்றார்.தொடர்ந்து, புனரமைக்கப்படும் ராட்சத கில்லன் மற்றும் ஒருங்கிணைந்த செராமிக் சுயஉதவிக்குழு சங்கம் நிர்வகிக்கும் கில்லன் மற்றும் அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லுாரியை அமைச்சர்கள் பார்வையிட்டு, மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், விரிவுரையாளர்கள் பற்றாக்குறை குறித்து அறிக்கையாக வழங்குமாறு அறிவுறுத்தினர்.தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, மாவட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன், நகர இளைஞரணி பொன்கணேஷ், ஒன்றிய செயலாளர்கள் கனககோவிந்தசாமி, வேல்முருகன், இளைஞரணி அமைப்பாளர் மணிவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X