இரட்டை கால்வாய் தூர் வாரும் பணி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் இரட்டை மழை நீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரில் முக்கிய மழை நீர் கால்வாய்களில் ஒன்றான இரட்டை கால்வாய் ஜெம் நகரில் துவங்கி அதியமான் நகர், சதாசிவம் நகர், ஆசிரியர் நகர், சத்தியா நகர் வழியாக தேனம்பாக்கம் ஏரியில் கலப்பதற்காக இந்த கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழை அக்., மாதம் துவங்கும் என



காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் இரட்டை மழை நீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகரில் முக்கிய மழை நீர் கால்வாய்களில் ஒன்றான இரட்டை கால்வாய் ஜெம் நகரில் துவங்கி அதியமான் நகர், சதாசிவம் நகர், ஆசிரியர் நகர், சத்தியா நகர் வழியாக தேனம்பாக்கம் ஏரியில் கலப்பதற்காக இந்த கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழை அக்., மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக மழை நீர் கால்வாய்கள் அனைத்தும் துார்வாரி பராமரிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள மழை நீர் கால்வாய்களை துார்வாரும் பணிகளுக்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.நேற்று காலை இரட்டை கால்வாய் துார்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்கு மாறு உத்தரவிட்டார். உடன் மாநகராட்சி கமிஷனர் கண்ணன் மற்றும் பொறியாளர்கள் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X