காஞ்சிபுரம்-'தனியார் விடுதிகள் புதிதாக பதிவு செய்தல் மற்றும் பதிவு புதுப்பித்துக்கொள்ளலாம்' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அறிக்கை:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரி விடுதிகள் இயங்கி வருகின்றன. இது தவிர, குழந்தைகள் மற்றும் தனியர் நிறுவனத்தில், வேலை செய்யும் பெண்கள் விடுதிகளும், இயங்கி வருகிறது.இதில், சில விடுதிகள் பதிவு செய்யாமலும், பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.இதை, கண்காணிப்பதற்கு, தமிழ்நாடு பெண்கள், குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014 நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தின்படி, விடுதி நிர்வாகிகள், https://tnswp.com என்ற இணையதள முகவரியில், உரிய ஆவணங்களுடன் விடுதிகளை பதிவு செய்தல் மற்றும் பதிவு புதுப்பிக்கும் பணிகளை, வரும் -31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும், விடுதி செயல்பாடுகள் குறித்து, தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வின் போது, குறைபாடுகளை கண்டறியும் பட்சத்தில், துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விபரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலகம் மற்றும் 044- 27239334 தொலைபேசி எண்ணில் அணுகலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.