சிக்கலில் சோனியா, ராகுல்

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 07, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை காங்., தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் இயக்குனர்களாக இருக்கும் 'யங் இந்தியன்' நிறுவனம் வாங்கிய வழக்கில், அமலாக்கத் துறை அவர்களை விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக சோனியா, ராகுல் மற்றும் சில காங்., தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.சமீபத்தில், காங்., சீனியர் தலைவர் மல்லிகார்ஜுன
சிக்கலில் சோனியா, ராகுல்

'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை காங்., தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் இயக்குனர்களாக இருக்கும் 'யங் இந்தியன்' நிறுவனம் வாங்கிய வழக்கில், அமலாக்கத் துறை அவர்களை விசாரணை செய்து வருகிறது.

இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக சோனியா, ராகுல் மற்றும் சில காங்., தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.சமீபத்தில், காங்., சீனியர் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லியுள்ளாராம். இந்த பதில்கள் சோனியா, ராகுல் சொன்னதுடன் ஒத்துப் போகவில்லையாம். இதனால், ராகுல், சோனியா மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாம்.


latest tamil news




வரும் 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்த மோடி முயற்சித்து வருகிறார் என, காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர். நேஷனல் ஹெரால்டிற்கு சொந்தமான பல கட்டடங்கள், பல மாநிலங்களில்
உள்ளன. இவற்றிலிருந்து மாதம் ஒன்றுக்கு 40 கோடி ரூபாய் அளவுக்கு வாடகையாக வருகிறதாம். 'இந்த வருமானத்தை பா.ஜ., தடுக்கப் பார்க்கிறது; விரைவில் இந்த சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கப்படலாம்' என காங்., தலைவர்கள் கூறுகின்றனர்.
'இந்த தகவல் உண்மை தான்; விரைவில் இந்த சொத்துக்கள் முடக்கப்படும்' என, டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VELKANI S - TENKASI,இந்தியா
07-ஆக-202216:56:49 IST Report Abuse
VELKANI S இதுவரை மோடி அரசு செய்த விசாரணைகளில் முன்னால் தமிழ்நாடு அமைச்சர்கள் விஜயபாஸ்கர் போன்றோர் வீட்டில் அவர்களுடைய இடங்களில் செய்த ரைடு என்ன நிலைமையில் இருக்கிறது இது தேவையற்ற ஒரு வேலை
Rate this:
Cancel
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
07-ஆக-202206:20:04 IST Report Abuse
மிளிர்வன் வருமானமோ 500 கோடி வருடத்திற்கு.. சொத்தின் மதிப்போ பல்லாயிரம் கோடிகள்.. நேஷனல் ஹெரால்ட் உட்பட மூன்று பத்திரிக்கைகளை நடத்திய அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நஷ்டத்தில் இயங்கியதால் உதவும் முகமாக, காரணம் காட்டி, சுற்றி வளைத்து வெறும் ஐம்பது லட்சத்தில் 2011 இலிருந்து Young India என்கிற பெயரில் சூனியாவும் ராவூலும் ஆட்டையை போட்டிருக்கின்றனர்.. கேள்வி கேட்டால், மக்களை தூண்டி போராட்டம்.. இதுகள் திருடி தின்பதற்கு ஏதுவாக மக்களும், கட்சியும் போராட வேண்டுமா..?
Rate this:
Cancel
07-ஆக-202205:50:57 IST Report Abuse
Gopalakrishnan S ரூ. நாற்பது கோடி வாடகை ! சொத்து மதிப்பு நாற்பது ஆயிரம் கோடியாக இருக்கும் ! மஹாராஷ்டிராவில் விவசாயி நூறு ரூபாய்க்காக தற்கொலை செய்து கொள்வதைப் பார்க்கிறோம் ! ஊழல் கான்கிராஸ் !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X