களக்காட்டூர் ஊராட்சியில் கால்வாய் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

Added : ஆக 07, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்,-'வீட்டு உபயோக கழிவு நீர் வெளியேறும் வகையில், கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்' என, களக்காட்டூர் காந்தி ரோடு ஒட்டியுள்ள தெரு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சி, தெருவில், 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்தெருவில் வசிப்போரின் வீடுகளில் இருந்து வீட்டு உபயோக கழிவு நீர் வெளியேறுவதற்கு கால்வாய் வசதி இல்லை.வீட்டில்



காஞ்சிபுரம்,-'வீட்டு உபயோக கழிவு நீர் வெளியேறும் வகையில், கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்' என, களக்காட்டூர் காந்தி ரோடு ஒட்டியுள்ள தெரு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சி, தெருவில், 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்தெருவில் வசிப்போரின் வீடுகளில் இருந்து வீட்டு உபயோக கழிவு நீர் வெளியேறுவதற்கு கால்வாய் வசதி இல்லை.வீட்டில் தோட்டம் வைத்துள்ளவர்கள் வீட்டு உபயோக கழிவு நீரை தோட்டத்தில் உள்ள செடி, கொடி, மரங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.இடவசதி இல்லாதவர்கள் வீட்டு உபயோக கழிவு நீர் வெளியேற்ற வசதி இல்லாததால் . வீதியில் விடவேண்டிய நிலை உள்ளது. இதனால், அக்கம் பக்கத்தினரிடையே தகராறு ஏற்படுகிறது.எனவே, வீட்டு உபயோக கழிவு நீர் மற்றும் மழை நீர் வெளியேறும் வகையில், கான்கிரீட் மேல்தளத்துடன் மழை நீர் வடிகால்வாய் ஏற்படுத்த வேண்டும் என, களக்காட்டூர் தெரு மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X