கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில், நாள் ஒன்றுக்கு, 8 கோடி லிட்டர் குடிநீர் வழங்க முடிவு

Added : ஆக 07, 2022 | |
Advertisement
தாம்பரம்------தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில், நாள் ஒன்றுக்கு, 8 கோடி லிட்டர் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம்பயன்பாட்டிற்கு வந்தால், பல ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, சமூக ஆர்வலர்கள்கருத்து தெரிவித்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்,

தாம்பரம்------தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில், நாள் ஒன்றுக்கு, 8 கோடி லிட்டர் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம்பயன்பாட்டிற்கு வந்தால், பல ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, சமூக ஆர்வலர்கள்கருத்து தெரிவித்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், அனகாபுத்துார், பம்மல் நகராட்சிகள்; பெருங்களத்துார், பீர்க்கன்கரணை, மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பேரூராட்சிகள் ஆகியவற்றை இணைத்து, புதியதாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.பத்து உள்ளாட்சிகளை இணைத்து, மாநகராட்சியாக உருவாக்கப்பட்டாலும், குடிநீர் வினியோகத்தை பொறுத்தவரை, தனித்தனி நீராதாரங்கள் வாயிலாகவே பெறப்படுகின்றன.60 கி.மீ., குழாய்தாம்பரத்தை பொறுத்தவரை, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு, பாலாறு படுகையில், வில்லியம்பாக்கம், உள்ளாவூர் பகுதிகளில் நீர் உறிஞ்சி கிணறுகள் அமைக்கப்பட்டு, 60 கி.மீ., துாரத்திற்கு குழாய் வாயிலாக எடுத்து வரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.பாலாற்றில் மணல் எடுத்ததன் விளைவாக, தண்ணீர் மட்டம் குறைந்து, தேவையான குடிநீர் கிடைப்பதில்லை. கிடைக்கும் குடிநீரை பகிர்ந்து வழங்குகின்றனர்.

பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், திருநீர்மலை, சிட்லபாக்கம் பகுதிகளை பொறுத்தவரை, ஆலந்துார்- - பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ வாட்டர் மூலம் குடிநீர் பெறப்படுகிறது.கோடையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் குறையும் போது, பல்லாவரம் பகுதிக்கான வினியோகம் தடைபடுகிறது; குறைந்தளவு தண்ணீரே கிடைக்கிறது.இதை கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.பம்மல், அனகாபுத்துார் பகுதிகளுக்கு செங்கழுநீர் கல்குட்டையில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து, தினசரி 25 லட்சம் லிட்டர் வினியோகம் செய்கின்றனர்.திரிசூலம், மூவரசம்பேட்டை கல் குவாரிகளில், சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கும் பணி முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.கட்டாயம்செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்துார், பீர்க்கன்கரணை பகுதிகளை பொறுத்தவரை, உள்ளூர் நீராதாரங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதனால், அப்பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மற்றொரு புறம், தாம்பரம் மாநகராட்சியுடன் சுற்றியுள்ள 15 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன.

அதனால், அந்த ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து பகுதிகளையும் சேர்த்து, ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, திட்ட அறிக்கை தயார் செய்யும் நடவடிக்கையை, மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.ஏரி, ஆழ்துளை கிணறு, பாலாறு போன்ற நீராதாரங்களில் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் குடிநீர் பெற்று, மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோகிக்க, நிர்வாகம் முடிவு செய்துள்ளது.மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில், கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாம் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அத்திட்டத்திற்கான குழாய் மேடவாக்கம், பள்ளிக்கரணை வழியாக பதிக்கப்படுகின்றன.

இதில், ஈச்சங்காடு சந்திப்பில் இருந்து, பல்லாவரம்- - துரைப்பாக்கம் சாலை வழியாக, குரோம்பேட்டை சாந்தி நகர் குடிநீர் தொட்டிக்கு குழாய் இணைக்கப்பட உள்ளது.எதிர்பார்ப்புஅதேபோல், மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி சாலை வழியாக கிழக்கு தாம்பரம் காந்தி பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும் ஓர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. பணிகள் முடிந்து, இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால், நாள்தோறும் 8 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதை வைத்து, மாநகராட்சி பகுதி முழுமைக்கும் பற்றாக்குறை இன்றி குடிநீர் வினியோகம் செய்யலாம். அதனால், இத்திட்டத்தை திட்டமிட்டப்படி முடிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


கடல்நீரில் இருந்து ௮ கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு

நீராதாரம் மொத்த அளவு கிடைக்கும் அளவுபல்லாவரம்குடிநீர் வடிகால் வாரியம் 50 லட்சம் லிட்டர் 25 லட்சம் லிட்டர்மெட்ரோ 1 கோடி லிட்டர் 80 லட்சம் லிட்டர்தாம்பரம்பாலாறு படுகை 1 கோடி லிட்டர் 90 லட்சம் லிட்டர்பம்மல்குடிநீர் வடிகால் வாரியம் 10 லட்சம் லிட்டர் தற்போது வாங்குவதில்லைமெட்ரோ 60 லட்சம் லிட்டர் 60 லட்சம் லிட்டர்அனகாபுத்துார்குடிநீர் வடிகால் வாரியம் 10 லட்சம் லிட்டர் தற்போது வாங்குவதில்லைமெட்ரோ 50 லட்சம் லிட்டர் 25 லட்சம் லிட்டர்



கடல்நீரில் இருந்து ௮ கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு

நீராதாரம் மொத்த அளவு கிடைக்கும் அளவுபல்லாவரம்குடிநீர் வடிகால் வாரியம் 50 லட்சம் லிட்டர் 25 லட்சம் லிட்டர்மெட்ரோ 1 கோடி லிட்டர் 80 லட்சம் லிட்டர்தாம்பரம்பாலாறு படுகை 1 கோடி லிட்டர் 90 லட்சம் லிட்டர்பம்மல்குடிநீர் வடிகால் வாரியம் 10 லட்சம் லிட்டர் தற்போது வாங்குவதில்லைமெட்ரோ 60 லட்சம் லிட்டர் 60 லட்சம் லிட்டர்அனகாபுத்துார்குடிநீர் வடிகால் வாரியம் 10 லட்சம் லிட்டர் தற்போது வாங்குவதில்லைமெட்ரோ 50 லட்சம் லிட்டர் 25 லட்சம் லிட்டர்



பணிகள் 'ஜரூர்'

நெம்மேலியில், இரண்டாம் கட்டமாக, 1,259.38 கோடி ரூபாயில், கூடுதலாக, 15 கோடி லிட்டர் திறன் உடைய, கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 2020, அக்டோபர் மாதம் துவங்கிய பணி, வேகமாக நடந்து வருகிறது.நெம்மேலியில் இருந்து, தென்சென்னை பகுதிக்கு, 47.35 கி.மீ., நீளத்தில் குழாய் பதிக்க திட்டமிட்டு, 39 கி.மீ., நீளத்தில் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிந்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில், குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு, வினியோகம் துவக்கப்படும் என தெரிகிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X