மது விற்பதை கண்டித்து மக்கள் சாலை மறியல்

Added : ஆக 07, 2022 | |
Advertisement
கூவத்துார்--நெடுமரம் கிராமத்தில், கள்ளத்தனமாக மது விற்பதை கண்டித்து, அரசு பேருந்தை மறித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கூவத்துார் அடுத்த நெடுமரம் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட கிராமத்தினர் வசிக்கின்றனர்.பல மாதங்களாக புதுச்சேரியில் இருந்தும், கூவத்துார் பகுதி 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் இருந்தும் மதுவை வாங்கி வந்து, நெடுமரம் கிராமத்தில் 24 மணி நேரமும்,



கூவத்துார்--நெடுமரம் கிராமத்தில், கள்ளத்தனமாக மது விற்பதை கண்டித்து, அரசு பேருந்தை மறித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கூவத்துார் அடுத்த நெடுமரம் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட கிராமத்தினர் வசிக்கின்றனர்.பல மாதங்களாக புதுச்சேரியில் இருந்தும், கூவத்துார் பகுதி 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் இருந்தும் மதுவை வாங்கி வந்து, நெடுமரம் கிராமத்தில் 24 மணி நேரமும், கள்ளத்தனமாக சிலர் மதுபாட்டில் விற்கின்றனர்.இங்கு மது வாங்கி, காலையிலேயே குடிக்கும் 'குடி'மகன்கள், வேலைக்கு செல்லாமல் போதையில் மயங்கி கிடக்கின்றனர்.சிலர், அவ்வழியாக செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்களிடம் தொந்தரவு செய்கின்றனர்.இதனால் அதிருப்தியடைந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோரை உடனடியாக கைது செய்ய கோரி, கூவத்துார் - -மதுராந்தகம் சாலையில் போராட்டம் நடத்தினர். கடலுார் கிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்தை சிறைப்பிடித்து, மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த கூவத்துார் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு நடத்தி, 'கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X