போதைப்பொருள் பயன்பாடு தடுக்க முயற்சி:ஒருங்கிணைந்த மையம் அமைக்க ஆலோசனை

Added : ஆக 07, 2022 | |
Advertisement
கோவை:போதைப்பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைந்த மையம் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., பத்ரி நாராயணன் முன்னிலை வகித்தனர்.அதில், கலெக்டர் சமீரன் பேசியதாவது:போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி கல்வி, கல்லுாரி கல்வி துறையினர்,

கோவை:போதைப்பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைந்த மையம் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., பத்ரி நாராயணன் முன்னிலை வகித்தனர்.அதில், கலெக்டர் சமீரன் பேசியதாவது:போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி கல்வி, கல்லுாரி கல்வி துறையினர், அந்தந்த பள்ளி, கல்லுாரிகளில் நடத்த வேண்டும். உடல் நலம் பாதிப்பு, சட்டம், உளவியல் நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாடு இருந்தால், விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்கள் போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருந்துகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் அடிக்கடி மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, போதைப்பொருள் விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை மருந்து தடுப்பு பிரிவு தொடர்பு எண்களை, அனைத்து மருந்து கடைகளிலும் காட்சிப்படுத்த வேண்டும். போதைப்பொருட்கள் தடுப்புக்கு ஒருங்கிணைந்த மையம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இம்மையத்தில் மருத்துவர்கள், உளவியல் நிபுணர் உள்ளிட்டவர்கள் பணியில் இருப்பர். போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பர். இக்குழுவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு, போதைப்பொருட்கள் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க, தேவையான நடவடிக்கை மேற்கொள்வர்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X