கையில் பை கொண்டு சென்றால்பாலிதீனுக்கு 'குட் பை' சொல்லலாம்!

Added : ஆக 07, 2022 | |
Advertisement
ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும், 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்தும், அவற்றின் பயன்பாடு, புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 'அதன் பயன்பாடு இருந்து கொண்டு தான் இருக்கிறது' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்து, ''இத்திட்டத்தை மாசுகட்டுப்பாட்டு வாரியம், கலெக்டர்கள், உள்ளாட்சி அமைப்பினருடன் இணைந்து,
கையில் பை கொண்டு சென்றால்பாலிதீனுக்கு 'குட் பை' சொல்லலாம்!

ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும், 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்தும், அவற்றின் பயன்பாடு, புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 'அதன் பயன்பாடு இருந்து கொண்டு தான் இருக்கிறது' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்து, ''இத்திட்டத்தை மாசுகட்டுப்பாட்டு வாரியம், கலெக்டர்கள், உள்ளாட்சி அமைப்பினருடன் இணைந்து, பிளாஸ்டிக்கை தடை செய்வது, அவற்றுக்கான மாற்றுப்பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

இந்த இரு விஷயங்களையும் தாண்டி, உள்ளாட்சி நிர்வாகத்தினர் வீடு, வீடாக சென்று குப்பையை தரம் பிரித்து வாங்குவது, அதில் மக்காத பாலிதீன் பொருட்களை தரம் பிரித்து, மறு சுழற்சிக்கு பயன்படுத்துவது போன்ற திடக்கழிவு திட்டம் சார்ந்த அறிவிப்புகள் வெறும் பெயரளவுக்கே இருக்கின்றன. இதை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் உள்ளாட்சி நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.உள்ளாட்சி நிர்வாகத்தினர் சிலர் கூறுகையில், ''பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்களில் துாய்மை பணியாளர்கள் போதியளவில் இல்லை. குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்ற அறிவிப்பை, 98 சதவீத குடும்பத்தினர் பின்பற்றுவதில்லை. தரம் பிரிக்க தேவையான குப்பை தொட்டிகளை உள்ளாட்சி நிர்வாகத்தினர் வழங்குவர் என காத்திருக்கின்றனர். பாலிதீன் பைகளுக்கு மிக சரியான மாற்றுப் பொருள் மக்களின் பழக்கத்துக்கு வரவில்லை. பெரியபெரிய 'மால்'களில், மளிகை பொருட்களை 'பேக்கிங்' செய்ய, சற்று கடினமான காகித பைகளை பயன்படுத்துகின்றனர். அரை கிலோ, ஒரு கிலோ, 2 கிலோ வரை கூட, 'பேக்கிங்' செய்யும் வகையில், அந்த காகிதப் பைகள் கடினத்தன்மையுடன் உள்ளன. இவற்றுக்கு விலை எதுவும், நிர்ணயம் செய்வதில்லை. இதுபோன்று ஒவ்வொரு கடைகளிலும், வியாபாரிகள் முயற்சி செய்தால், பாலிதின் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும்'' என்றனர்.வெளியில் செல்வோர் கைக்குட்டையை மறக்காமல் எடுத்து செல்வர். அதோடு சேர்ந்து ஒரு துணிப்பையையும் எடுத்து தங்கள் பாக்கெட் அல்லது வாகனங்களில் வைத்துக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டால், பாலிதீன் பைகளுக்கான அவசியம் இருக்காது. அதே நேரம், 'கடைகளில் பாலிதீன் பைகள் கிடைக்காது; நாம் தான் கையுடன் ஒரு பையை எடுத்து செல்ல வேண்டும்,' என்ற மனநிலையையும் மக்கள் வளர்த்து கொள்வது, மாற்றத்துக்கு வித்திடும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X