மோடிக்கு குவிந்த கடிதங்கள்

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 07, 2022 | |
Advertisement
புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக சென்னை வந்து, செஸ் ஒலிம்பியாட் மற்றும் அண்ணா பல்கலை விழாவில் பங்கேற்று டில்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.பிரதமர் அலுவலகத்திற்கு, 8,000க்கும் மேற்பட்ட 'இ - மெயில்'கள் மற்றும் தபால் கார்டுகள் தமிழகத்திலிருந்து வந்துள்ளதாம். இவை அனைத்தும் தமிழில் உள்ளதாம்.'தமிழக மக்கள் என் மீது இவ்வளவு பாசமாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக சென்னை வந்து, செஸ் ஒலிம்பியாட் மற்றும் அண்ணா பல்கலை விழாவில் பங்கேற்று டில்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.பிரதமர் அலுவலகத்திற்கு, 8,000க்கும் மேற்பட்ட 'இ - மெயில்'கள் மற்றும் தபால் கார்டுகள் தமிழகத்திலிருந்து வந்துள்ளதாம்.



latest tamil news




இவை அனைத்தும் தமிழில் உள்ளதாம்.'தமிழக மக்கள் என் மீது இவ்வளவு பாசமாக இருக்கின்றனரே' என மோடி சந்தோஷப்பட்டாராம். இந்த இ - மெயில் மற்றும் கடிதங்களில் உள்ள விபரங்கள் அனைத்தையும் படித்து தனக்கு ஒரு 'ரிப்போர்ட்' தர ஏற்பாடு செய்துள்ளாராம் மோடி.இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news




இந்த குழுவில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் உள்ளாராம். இந்தக் குழு அனைத்து கடிதங்களையும் படித்து அதில் உள்ள சாராம்சத்தை பிரதமருக்கு தெரியப்படுத்த உள்ளதாம்.சமீபத்திய சென்னை விசிட்டை அடுத்து, பிரதமர் மதுரைக்கு வர திட்டமிட்டுள்ளாராம். அடுத்த ஓரிரு மாதங்களில் அவர் மதுரைக்கு வருவார் என்கின்றனர், பிரதமர் அலுவலக அதிகாரிகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X