ஆன்மிகம்
நாம சங்கீர்த்தனம்ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 88வது அவதார ஜெயந்தியை முன்னிட்டு நாம சங்கீர்த்தனம் ஓடக்காடு ராமகிருஷ்ண பஜனை மடத்தில் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு துவங்கி, 8:30 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில், டாக்டர் கணேஷ் குழுவினர் நாம சங்கீர்த்தனத்தை வழங்க உள்ளனர்.திருமுறை முற்றோதுதல்ஞாலம் அளந்த எம்பிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய, ஏழாம் திருமுறை தொடர் முற்றோதுதல் விழா, திருமுருகன்பூண்டி கோவில் அருகே உள்ள ஏ.வி.பி., அறக்கட்டளையில் காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. திருஞானசம்பந்தர் திருமடம் சிவாக்கர தேசிக சுவாமிகள் வழங்குகிறார். கிளாசிக் கார்ட்ஸ் ஒருங்கிணைந்து நடத்துகிறது.ஆடி திருவிழாஅவிநாசி, கைகாட்டிப்புதுார், வாரச்சந்தை அருகிலுள்ள ஸ்ரீநாகதேவி அம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. அதில், இன்று காலை, 9:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகளும் நடைபெற உள்ளது. அலங்கார தீபாராதனைக்கு பின், மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.ராகு கால வழிபாடுஅவிநாசி, பெரிய தேர் நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில், வாராந்திர ராகு கால வழிபாடு, மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை நடைபெறுகிறது. இதில், உலக நன்மை மற்றும் அமைதிக்காக சங்கல்பம் எடுத்து கூட்டு வழிபாடு மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.திருவாசக சொற்பொழிவுஅவிநாசி, மங்கலம் ரோட்டிலுள்ள செந்தில்குமார் அரிசி ஆலை நிறுவன வளாகத்தில், திருவாசக தேனமுது ஆன்மிக சொற்பொழிவு மாலை, 6:00 மணிக்கு துவங்கி நடைபெறுகிறது. இதில், அப்பரடிப்பொடி சொக்கலிங்கம் ஐயா, செற்பொழிவு நிகழ்த்துகிறார். முன்னதாக கூட்டு வழிபாடும் நடக்கிறது. பொது ரத்ததான முகாம்வலிமை சேவை அமைப்பு, சுப்ரீம் மொபைல்ஸ் சார்பில் ரத்ததான முகாம், போயம்பாளையம் பிரிவு ஸ்ரீ சரண் மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை, 9:30 மணிக்கு துவங்கி, மதியம், 1:00 மணி வரை நடக்கும் முகாமில் ரத்ததானம் வழங்க விருப்பமுள்ளோர் பங்கேற்கலாம்.செயற்கை கால் முகாம்சக் ஷம் மாற்றுத்திறனாளர் நலன் விரும்பும் தேசிய அமைப்பு சார்பில் செயற்கை கால அளவீடு முகாம் மங்கலம் ரோடு, பழகுடோன் அருகேயுள்ள செல்வ விநாயகர் கோவிலில் நடக்கிறது. செயற்கை கால் தேவைப்படுவோர் தங்கள் புகைப்படம், ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் மதியம், 1:00 மணிக்கு வரவும். செயற்கை கால் வழங்குதல் முகாம் மாலை, 5:00 மணிக்கு ஹார்வி ரோடு பிருந்தாவன் ஓட்டலில் நடக்கிறது.மாநில மாநாடுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு துவங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக இன்று, தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் மண்டபத்தில் காலை, 9:30 மணிக்கு அறிக்கைகள் மீதான விவாதம் துவங்குகிறது. மாலை, 5:00 மணிக்கு கருத்தரங்கத்துடன் நிறைவடைகிறது.