ஐ.ஏ.எஸ்., அதிகாரி அபூர்வா தாயின் மற்றொரு வீடு அகற்றுவது ஒத்திவைப்பு

Added : ஆக 07, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூரில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்த, முதன்மைச் செயலர் ஐ.ஏ.எஸ்., அபூர்வாவின் தாய் அருணோதயாவின் மற்றொரு வீட்டை அகற்றும் பணி, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சியில், வெள்ளை குட்டை 6 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த குட்டை நீர்நிலையில் உள்ள

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூரில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்த, முதன்மைச் செயலர் ஐ.ஏ.எஸ்., அபூர்வாவின் தாய் அருணோதயாவின் மற்றொரு வீட்டை அகற்றும் பணி, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சியில், வெள்ளை குட்டை 6 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த குட்டை நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற, அதே கிராமத்தை சேர்ந்த ரேணுகா, 45, என்பவர், வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் படி திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹசரத் பேகம் முன்னிலையில், வருவாய் துறையினர், புல எண் 109 / 7ல் இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அபூர்வாவின் தாய் அருணோதயாவின் வீடு மற்றும் தொழுதாவூர் ஊராட்சி தலைவர் அருள்முருகன் வீடு உட்பட, எட்டு வீடுகள், ஒரு கடை, இரண்டு அரசு கட்டடங்கள் உட்பட 11 கட்டடங்களை, ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக அகற்றினர்.

அப்போது, 'தற்போது வசித்து வரும் இன்னொரு வீட்டிற்கு, 2002ம் ஆண்டு, திருத்தணி வருவாய் அதிகாரியால் பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே அதை அகற்றக்கூடாது' என, அதிகாரிகளிடம் அருணோதயா தெரிவித்தார். இதையடுத்து, ஆய்வு செய்து முடிவெடுப்பதாக வருவாய் அதிகாரிகள் கூறி சென்றனர்.

இதையடுத்து, அவரது வீட்டை அகற்றுவது தொடர்பாக, கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், 11:௦௦ மணி வரை, கட்டட இடிப்புக்கு வரவில்லை. தங்களின் கட்டடங்களை அகற்றிய அதிகாரிகள், அருணோதயாவின் கட்டடத்தை அகற்றாதது குறித்து கேள்வி எழுப்பிய ஆக்கிரமிப்பாளர்கள், வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி தலைவரை, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சிறைபிடித்தனர்.

பின், போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.பின், மதியம் 12:00 மணிக்கு, திருத்தணி தாசில்தார் வெண்ணிலா மற்றும் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் வந்து, ஆக்கிரமிப்பாளர் மற்றும் மக்களிடம் பேச்சு நடத்தி, மாற்று இடம் வழங்க பரிசீலிப்பதாக கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, திருத்தணி தாசில்தார் வெண்ணிலா கூறுகையில், ''2002ல் அருணோதயா நிலத்திற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ''எனவே, வீடு அகற்றுவது குறித்து மூன்று நாட்களுக்குள் ஆய்வு செய்து, முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
07-ஆக-202202:39:35 IST Report Abuse
BASKAR TETCHANA ஒரு முன்னாள் முதன்மை செயலாளர் வீட்டை இடித்தார்கள் அது அரசு இடம் என்று வேறு சொல்லுகிறீர்கள். அந்த அறிவாலய கட்டிடம் ஸ்டாலின் அப்பன் வீட்டு சொத்தா. அது ஒரு விடுதி. அது அரசாங்கத்தை சேர்ந்தது என்கிறார்கள். திருப்பதி (பி.ஜெ.பி). கேஸ் வேறு போட்டார் .அது கிணற்றில் விழுந்த கல் மாதிரி உள்ளது. அதை என் இடிக்கவில்லை. ஒரு சமயம் திருப்பதி தி.மு.க.விடம் காசு வாங்கி கொண்டு பேசாமல் இருக்கிறாரா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X