சிதிலமடைந்த விட்டனேரி ரோடு

Added : ஆக 07, 2022 | |
Advertisement
காளையார்கோவில் : காளையார்கோவில் ஒன்றியம் மாந்தாலியில்குருந்து விட்டனேரி செல்லும் ரோடு சிதிலமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.காளையார்கோவிலில் இருந்து மாந்தாலி வழியாக விட்டனேரி செல்லும் கிராமத்திற்கான ரோடு 3 கி.மீ., துாரம் உள்ளது. இந்த ரோடு 200 மீட்டர் மட்டுமே தார் ரோடாக அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு 2.80 கி.மீ., ரோடு இன்றுவரை மண்
சிதிலமடைந்த விட்டனேரி ரோடு


காளையார்கோவில் : காளையார்கோவில் ஒன்றியம் மாந்தாலியில்குருந்து விட்டனேரி செல்லும் ரோடு சிதிலமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.காளையார்கோவிலில் இருந்து மாந்தாலி வழியாக விட்டனேரி செல்லும் கிராமத்திற்கான ரோடு 3 கி.மீ., துாரம் உள்ளது.

இந்த ரோடு 200 மீட்டர் மட்டுமே தார் ரோடாக அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு 2.80 கி.மீ., ரோடு இன்றுவரை மண் ரோடாக உள்ளது.இப்பகுதியில் சொர்ணவள்ளி நகர், அருள் நகர், ஜே.ஆர்., நகர் என 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு ரோடு குண்டும்குழியுமாக உள்ளது.

ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் இந்த ரோட்டில் வருவதை தவிர்க்கின்றனர்.குண்டும் குழியுமான சாலை மழை நேரங்களில் சேறும், சகதியுமாக மாறுகிறது. இதன் காரணமாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மாந்தாலியிலிருந்து விட்டனேரி செல்லும் ரோட்டினை சீரமைத்து மக்கள் விபத்தின்றி பயணிக்க வழி செய்ய வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X