குட்கா கடத்திய 2 பேர் கைது

Added : ஆக 07, 2022 | |
Advertisement
ஓசூர்:ஓசூர் வழியாக, 11.40 லட்சம் ரூபாய் மதிப்பு புகையிலை பொருட்களை கடத்திய, இருவர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பூனப்பள்ளி சோதனைச்சாவடியில், மத்திகிரி ஸ்டேஷன் எஸ்.ஐ., பூபதி ராமராஜூலு மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். புகையிலைஒரு லாரியில் தனித்தனி அறைகள் அமைத்து, புகையிலை பொருட்களை கடத்தியது தெரிந்தது. லாரி டிரைவரான, சேலம் மாவட்டம்,
குட்கா கடத்திய 2 பேர் கைது

ஓசூர்:ஓசூர் வழியாக, 11.40 லட்சம் ரூபாய் மதிப்பு புகையிலை பொருட்களை கடத்திய, இருவர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பூனப்பள்ளி சோதனைச்சாவடியில், மத்திகிரி ஸ்டேஷன் எஸ்.ஐ., பூபதி ராமராஜூலு மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.


புகையிலை


ஒரு லாரியில் தனித்தனி அறைகள் அமைத்து, புகையிலை பொருட்களை கடத்தியது தெரிந்தது. லாரி டிரைவரான, சேலம் மாவட்டம், செம்மாண்டபட்டி தங்கதுரை, 37, என்பவரை கைது செய்தனர்.விசாரணையில், கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, 9 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 779 கிலோ புகையிலை பொருட்களை, லாரியுடன் பறிமுதல் செய்தனர்.ஓமலுார் தாலுகா, மாமரத்துாரைச் சேர்ந்த லாரி உரிமையாளர் பாலனை, போலீசார் தேடி வருகின்றனர்.


பறிமுதல்


இதேபோல், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து சென்னைக்கு புகையிலை பொருட்களை கடத்திய இன்னோவா காரை, போலீசார் மடக்கினர். கார் டிரைவரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகாராம், 28, என்பவரை கைது செய்து, 1 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 238 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X