கூட்டுறவு வங்கிகளில் கறவை மாடு கடன் பெறுவதில் ஏமாற்றம்

Added : ஆக 07, 2022 | |
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் கறவை மாடு கடன் பெறுவதில் அரசியல் தலையீடு காரணமாக உண்மையான பயனாளிகள் கடன் பெற முடியாமல் ஏமாற்றம்அடைவதாக புகார் எழுந்துள்ளது. பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நபார்டு வங்கி, அந்தந்த மாநில கூட்டுறவு வங்கிகள்மூலம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கறவை மாடு
கூட்டுறவு வங்கிகளில் கறவை மாடு கடன் பெறுவதில் ஏமாற்றம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் கறவை மாடு கடன் பெறுவதில் அரசியல் தலையீடு காரணமாக உண்மையான பயனாளிகள் கடன் பெற முடியாமல் ஏமாற்றம்அடைவதாக புகார் எழுந்துள்ளது.

பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நபார்டு வங்கி, அந்தந்த மாநில கூட்டுறவு வங்கிகள்மூலம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கறவை மாடு வளர்ப்போருக்கு ரூ.14,000 கடன் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக நில அடங்கல்,ஏற்கனவே பசு வளர்ப்பது உண்மை என்பதற்காக கால்நடை டாக்டரிடம் பெற்ற சான்றுடன் விண்ணப்பிப்போருக்கு கடன் வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த விதிமுறையை பின்பற்றாமல் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய நிலம் இல்லாத, பசு வளர்க்காத அரசியல் தலையீடு உள்ளவர்களுக்கு கடன் வழங்குமாறு வங்கி அதிகாரிகளை வற்புறுத்துகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வளர்ச்சி பணிகளிலும் அரசியல் தலையீடு காரணமாக நபார்டு போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே பசு மாடு வளர்ப்பதற்கான கடன் வழங்க வேண்டும் என தொடக்க கூட்டுறவுகடன் சங்க செயலர்களுக்கு, கலெக்டர் மதுசூதன் ரெட்டி கட்டாய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இந்த கடனை ஒரு ஆண்டிற்குள் செலுத்திவிட்டால் வட்டி கிடையாது. அதற்கு மேல் கடனை செலுத்தாவிடில் 7 சதவீத வட்டி வசூலிக்கப்படும். பால் உற்பத்தியை பெருக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள நல்ல திட்டம் சிவகங்கையில் விரயமாகிறது.வசூலாகாத ரூ.130 கோடி: விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு இங்குஉள்ள 125 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு பசு மாடு கடன் வழங்க ரூ.130 கோடி வழங்கியது.

அதிலும் அரசியல் தலையீட்டால் பெற்ற கடனை திரும்ப செலுத்த யாரும் முன்வரவில்லை. கடந்த ஆண்டு வழங்கிய ரூ.130 கோடி கடனில் 20 சதவீதம் மட்டுமே வசூலாகியுள்ளது. அதே போன்று இந்த ஆண்டும் வழங்கப்படும் பசு மாடு கடனை அரசியல் தலையீடு மூலம் பெற்று செல்பவர்கள் திரும்ப செலுத்தாமல் கிடப்பில் போடும் நிலை ஏற்படும். எனவே அரசு உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே பசு மாடு வாங்க கடன் வழங்க வேண்டும், என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X