ஆள் மாறாட்டம்; 3 ஆண்டு தடை

Added : ஆக 07, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவில் வழியிலுள்ள, ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராமராஜ் தலைமை வகித்தார். குறுமைய இணைச் செயலர்கள் மாணிக்கவாசகம், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.குறுமைய போட்டியின் கண்காணிப்பு குழு உறுப்பினர் முருகன் பேசியதாவது:மாணவியரை
ஆள் மாறாட்டம்; 3 ஆண்டு தடை

திருப்பூர்:திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவில் வழியிலுள்ள, ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராமராஜ் தலைமை வகித்தார். குறுமைய இணைச் செயலர்கள் மாணிக்கவாசகம், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.குறுமைய போட்டியின் கண்காணிப்பு குழு உறுப்பினர் முருகன் பேசியதாவது:மாணவியரை விளையாட்டு போட்டிக்கு அழைத்து வந்தால், பெண் ஆசிரியை ஒருவர் அல்லது உடற்கல்விஆசிரியர் கட்டாயம் உடனிருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் விலை உயர்ந்த பொருட்களை கொண்டு வரக்கூடாது.போட்டியில் தவறான வயதை குறிப்பிட்டு போட்டியில் பங்கேற்க வைத்தாலோ, ஆள்மாறாட்டம் செய்வது கண்டறியப்பட்டாலோ மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அறிவுரைப்படி போட்டியில் மூன்று ஆண்டுகள் பங்கேற்க தடை விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X