கிரிக்கெட் போட்டி துவக்கம்

Added : ஆக 07, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், பி.ஆர்.,தேவர் டிராபிக்கான, மாவட்ட கிரிக்கெட் போட்டி முதல் சுற்று நேற்றுமுன்தினம் துவங்கியது. 16 அணிகள் பங்கேற்கின்றன. திருப்பூர் டீ பப்ளிக் பள்ளியில் நடந்த முதல் போட்டியில், திருப்பூர் டி.சி.ஏ., பேட்டிங் செய்தது. 49 ஓவரில், ஒரு விக்கெட் இழப்புக்கு, 345 ரன் குவித்தது.அணியின் பேட்ஸ்மேன், ஸ்ரீ சிவாஜி, 162 ரன்கள் எடுத்து

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், பி.ஆர்.,தேவர் டிராபிக்கான, மாவட்ட கிரிக்கெட் போட்டி முதல் சுற்று நேற்றுமுன்தினம் துவங்கியது. 16 அணிகள் பங்கேற்கின்றன. திருப்பூர் டீ பப்ளிக் பள்ளியில் நடந்த முதல் போட்டியில், திருப்பூர் டி.சி.ஏ., பேட்டிங் செய்தது. 49 ஓவரில், ஒரு விக்கெட் இழப்புக்கு, 345 ரன் குவித்தது.அணியின் பேட்ஸ்மேன், ஸ்ரீ சிவாஜி, 162 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடின இலக்கை விரட்டிய நாமக்கல் டி.சி.ஏ., அணி, 28.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து, 62 ரன் மட்டுமே எடுத்தது. 283 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் டி.சி.ஏ., அபார வெற்றி பெற்றது. அணியின் ஜெய்ரஷ்வந்த், பத்து ரன்கள் கொடுத்து, ஆறு விக்கெட்டுகளை சாய்த்து, அசத்தினார்.பல்லடம், வெட்டுப்பட்டான்குட்டை சுலோசனா மில்ஸ் மைதானத்தில், மற்றொரு போட்டி நடந்தது. கிருஷ்ணகிரி டி.சி.ஏ., 46.4 ஓவரில், 217 ரன்கள் எடுத்தது. பேட்ஸ்மேன் லிங்கேஸ்வரன் 69 ரன் எடுத்தார். இலக்கை விரட்டிய விழுப்புரம் டி.சி.ஏ., அணி, 50 ஓவரில், ஒன்பது விக்கெட் இழந்து, 96 ரன் எடுத்தது. 121 ரன்கள் வித்தியாசத்தில், கிருஷ்ணகிரி அணி வெற்றி பெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X