ஓய்வூதியர் சங்க மாநாடு

Added : ஆக 07, 2022 | |
Advertisement
திருப்பூர்:தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின், 4வது மாவட்ட மாநாடு, கே.ஆர்.சி., சிட்டி சென்டரில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். துணை தலைவர் மணிவேலு, அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். வட்ட கிளை தலைவர் மகுடேஸ்வரன் வரவேற்றார். பி.எஸ்.என்.எல்., சங்க நிர்வாகி சுப்பிரமணியன் மாநாட்டை துவக்கி வைத்தார்.பொருளாளர் மேகவர்ணன், வரவு-செலவு

திருப்பூர்:தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின், 4வது மாவட்ட மாநாடு, கே.ஆர்.சி., சிட்டி சென்டரில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். துணை தலைவர் மணிவேலு, அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். வட்ட கிளை தலைவர் மகுடேஸ்வரன் வரவேற்றார். பி.எஸ்.என்.எல்., சங்க நிர்வாகி சுப்பிரமணியன் மாநாட்டை துவக்கி வைத்தார்.பொருளாளர் மேகவர்ணன், வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். முன்னாள் மாநில செயலாளர் நிசார் அகமது சிறப்புரையாற்றினார். மாவட்ட துணை தலைவர்கள் நடராஜன், மாயன்குட்டி, ராமச்சந்திரன், ஜெயபால்ராஜ் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.ஓய்வு பெற்ற பள்ளி கல்லுாரி ஆசிரியர் நல சங்க தலைவர் நாட்டராயன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் அச்சுதன் உள்ளிட்டோர் பேசினர். மாநில துணை தலைவர் குப்பன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாவட்ட இணை செயலாளர் பாக்யம் நன்றி கூறினார். முன்னதாக, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X