கல்வி நிறுவன கட்டட வரன்முறை:6 மாதம் அவகாசம் நீட்டிப்பு

Added : ஆக 07, 2022 | |
Advertisement
திருப்பூர்:அனுமதியில்லாத கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறை செய்து கொள்ள, ஆறு மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் கட்டிய, அனுமதி பெறாத கட்டடங்களில், கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றை வரன்முறை செய்து கொள்ள, நகர் ஊரமைப்புத்துறை வழிகாட்டுதல் வழங்கியது. அதன்படி, கல்வி நிறுவனங்கள், விண்ணப்பித்து அங்கீகார அனுமதி பெற்று

திருப்பூர்:அனுமதியில்லாத கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறை செய்து கொள்ள, ஆறு மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் கட்டிய, அனுமதி பெறாத கட்டடங்களில், கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றை வரன்முறை செய்து கொள்ள, நகர் ஊரமைப்புத்துறை வழிகாட்டுதல் வழங்கியது. அதன்படி, கல்வி நிறுவனங்கள், விண்ணப்பித்து அங்கீகார அனுமதி பெற்று வருகின்றனர்.வழங்கப்பட்ட அவகாசம் நிறைவடைந்த நிலையில், கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறை செய்து கொள்ள, மேலும் ஆறு மாதங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மீண்டும் விண்ணப்பித்து, வரன்முறை செய்து கொள்ளலாம்.நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் (பொறுப்பு) மூக்கையா அறிக்கை:கடந்த, 2011ம் ஆண்டுக்கு முன் கட்டிய, அனுமதியில்லாத கல்வி நிறுவன கட்டுமானத்துக்கு, மீண்டும் வரன்முறை செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.விடுபட்டவர்கள், ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பித்து, உரிய கட்டணத்தை செலுத்தி அங்கீகார அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.கூடுதல் விவரங்களுக்கு, திருப்பூர் குமரன் வணிக வளாகத்தில் இயங்கும், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை, 0421 2235500 என்ற எண்களிலும், tiruppur.rdd@gmail.com என்ற முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X