ராட்சத மரத்தால் மலை ரயில் ரத்து அணைகளில் நீர் மட்டம் உயர்வு

Added : ஆக 07, 2022 | |
Advertisement
ஊட்டி:தண்டவாளத்தில் மரம் விழுந்ததால், நீலகிரி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.நீலகிரியில் நான்கு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 9:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் சராசரியாக, 41.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. ஊட்டி அருகே லவ்டேலில், ரயில் தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்ததில் தண்டவாளம் சேதமானது.இதனால், கேத்தி - ஊட்டி இடையே மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. அதே
ராட்சத மரத்தால் மலை ரயில் ரத்து அணைகளில் நீர் மட்டம் உயர்வு

ஊட்டி:தண்டவாளத்தில் மரம் விழுந்ததால், நீலகிரி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

நீலகிரியில் நான்கு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 9:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் சராசரியாக, 41.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. ஊட்டி அருகே லவ்டேலில், ரயில் தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்ததில் தண்டவாளம் சேதமானது.

இதனால், கேத்தி - ஊட்டி இடையே மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. அதே இடத்தில் ராட்சத மரம் வீட்டின் மேல் விழுந்தது. ஊட்டி தமிழக சாலை, அப்பர் பவானி, அவலாஞ்சி, மஞ்சூர் உட்பட மாவட்டத்தில் ஆங்காங்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினர், இயந்திர உதவியுடன் மரத்தை அறுத்து அப்புறப் படுத்திய பின், போக்குவரத்து சீரானது.கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, ஆகாஷ்பாலம் அருகே மண் சரிவு ஏற்பட்டு, வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 'பொக்லைன்' உதவியுடன் மண் சரிவு அகற்றப்பட்டது. மழைப்பொழிவு அதிகரிப்பால் மாவட்டத்தில், 42 மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

நீர் மட்டம் 'கிடுகிடு'

மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, காட்டுகுப்பை உள்ளிட்ட பகுதிகளில் மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குந்தா மின்வட்டத்திற்கு உட்பட்ட அணைகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லுார் அணைகளுக்கு வினாடிக்கு சராசரியாக, 500 - 600 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பைக்காரா மின்வட்டத்திற்கு உட்பட்ட பைக்காரா, பார்சன்ஸ்வேலி, போர்த்தி மந்து, கிளன்மார்கன், மாயார் உள்ளிட்ட அணைகளுக்கு சராசரியாக, 400 - 450 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான அணைகள், 90 சதவீதம் நிரம்பியுள்ளன.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X