கருமுட்டை விற்பனை விவகாரம்:ஈரோடு டாக்டர்கள் திடீர் 'ஸ்டிரைக்'

Added : ஆக 07, 2022 | |
Advertisement
ஈரோடு:ஈரோடில், 250 தனியார் மருத்துவமனைகள், 800 டாக்டர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.ஈரோடில், சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை பெற்ற விவகாரத்தில், ஈரோடு சுதா மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை, 'சீல்' வைத்தது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவால் சீல் அகற்றப்பட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதனால், மீண்டும் சீல் வைக்க நீதிமன்றம்
கருமுட்டை விற்பனை விவகாரம்:ஈரோடு டாக்டர்கள் திடீர் 'ஸ்டிரைக்'

ஈரோடு:ஈரோடில், 250 தனியார் மருத்துவமனைகள், 800 டாக்டர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடில், சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை பெற்ற விவகாரத்தில், ஈரோடு சுதா மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை, 'சீல்' வைத்தது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவால் சீல் அகற்றப்பட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதனால், மீண்டும் சீல் வைக்க நீதிமன்றம் அனுமதித்தது. மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமாரி, சீல் வைக்க சென்றார்.
மருத்துவமனை நிர்வாகம், நீதிமன்ற உத்தரவு நகலை கேட்டதால், அவர் திரும்பினார். சீல் வைக்க உத்தரவிட்டதை எதிர்த்து, இந்திய மருத்துவ சங்கம் சார்பில், மாவட்டத்தில் நேற்று, 250 தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது. ஐ.எம்.ஏ., ஈரோடு கிளையைச் சேர்ந்த, 800 டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஐ.எம்.ஏ., தேசிய துணை தலைவர் ராஜா கூறியதாவது: தமிழக அரசு, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம். இந்த மருத்துவமனை பல துறை மருத்துவ மனையாக செயல்பட்டு வருகிறது. ஒரு பிரிவில் தவறு நடந்ததாக கூறப்படும் நிலையில், ஒட்டுமொத்த மருத்துவமனைக்கு சீல் வைப்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.எம்.ஏ., நிர்வாகிகள், டாக்டர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தொடர்ந்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமாரி கூறுகையில், ''தனியார் மருத்துவமனையில், 95 நோயாளிகளை வெளியேற்ற, இரண்டு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தவுடன், மருத்துவமனைக்கு சீல் வைக்கப்படும்,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X