விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலர் கைது

Added : ஆக 07, 2022 | |
Advertisement
பெரம்பலுார்:பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அரியலுார் மாவட்ட செயலரை போலீசார் நேற்று கைது செய்தனர்.அரியலுாரைச் சேர்ந்தவர் முத்துவேல், 45; விஸ்வ ஹிந்து பரிஷத் அரியலுார் மாவட்ட செயலராக உள்ளார். இவர், தனது பேஸ்புக் பக்கத்தில், பிற மத கடவுளை தவறாக சித்தரித்து, இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் விதமாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில்

பெரம்பலுார்:பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அரியலுார் மாவட்ட செயலரை போலீசார் நேற்று கைது செய்தனர்.அரியலுாரைச் சேர்ந்தவர் முத்துவேல், 45; விஸ்வ ஹிந்து பரிஷத் அரியலுார் மாவட்ட செயலராக உள்ளார். இவர், தனது பேஸ்புக் பக்கத்தில், பிற மத கடவுளை தவறாக சித்தரித்து, இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் விதமாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.அரியலுார் வி.ஏ.ஓ., நந்தகுமார், அரியலுார் போலீசில் நேற்று புகார் அளித்தார். முத்துவேல் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பிற மதங்களை இழிவுபடுத்துதல், மத மோதல்களை துாண்டுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்து, முத்துவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X