உளவு கப்பல் பயணத்தை ரத்து செய்ய சீனாவுக்கு இலங்கை அரசு கடிதம்

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 07, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி-இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து, இலங்கையின் அம்பன்தோட்டாவுக்கு வரவிருக்கும் உளவுக் கப்பலின் பயணத்தை ரத்து செய்யும்படி, சீனாவுக்கு இலங்கை அரசு கடிதம் எழுதிஉள்ளது. இலங்கை கடற்பகுதிக்கு சீன உளவு கப்பல் வரவுள்ளதை முதன் முதலில், 'தினமலர்' நாளிதழ் தான் சுட்டிக் காட்டியது. இதையடுத்து இந்த விவகாரம் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.நம் அண்டை நாடான இலங்கையின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து, இலங்கையின் அம்பன்தோட்டாவுக்கு வரவிருக்கும் உளவுக் கப்பலின் பயணத்தை ரத்து செய்யும்படி, சீனாவுக்கு இலங்கை அரசு கடிதம் எழுதிஉள்ளது.latest tamil newsஇலங்கை கடற்பகுதிக்கு சீன உளவு கப்பல் வரவுள்ளதை முதன் முதலில், 'தினமலர்' நாளிதழ் தான் சுட்டிக் காட்டியது. இதையடுத்து இந்த விவகாரம் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.நம் அண்டை நாடான இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு, நம் மற்றொரு அண்டை நாடான சீனாவின் உளவு கப்பல், 'யுவான் வாங்க் - 5' கப்பல், வரும் 11 முதல் 17ம் தேதி வரை நிறுத்தி வைக்க அனுமதிவழங்கப்பட்டிருந்தது.

இத்துறைமுகம் சீனாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.உறவில் பிரச்னைசீனாவின் இந்த உளவு கப்பல், நம் நாட்டின் தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகியவற்றை கண்காணிக்க அனுப்பப்படுவதாக, மத்திய அரசு சந்தேகம் எழுப்பியது.தங்களுடைய சந்தேகம் மற்றும் எதிர்ப்பை இலங்கை அரசுக்கு மத்திய அரசு உறுதிபட தெரிவித்தது. சீன கப்பல், செயற்கைக்கோள் ஆராய்ச்சியை மேற்கொள்ள இலங்கைக்கு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், தற்போது இந்தியா - சீனா இடையேயான உறவில் பிரச்னை உள்ள நிலையில், அதன் உண்மையான நோக்கம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.கடும் பொருளாதார நிதி நெருக்கடியில் இலங்கை அரசு தவித்து வரும் நிலையில், இந்திய அரசு மட்டுமே, 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை அளித்துள்ளது. இதைத் தவிர மனிதாபிமான அடிப்படையில் பல உதவிகளையும் செய்து வருகிறது.சுட்டிக்காட்டிய 'தினமலர்'இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து, சீன வெளியுறவு அமைச்சகத்துக்கு, இலங்கை வெளியுறவு அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.அதில், அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வரும் பயணத்தை ரத்து செய்யும்படி கூறப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்த விவகாரத்தில், இரு நாடுகளும் ஆலோசனை நடத்தும் வரை, பயணத்தை நிறுத்தி வைக்கும்படி அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.கடந்த ஜூலை 13ம் தேதி சீனாவின் ஜியாங்க்யின்னில் இருந்து புறப்பட்ட இந்த உளவுக் கப்பல், தற்போது கிழக்கு சீன கடலில் தெற்கு ஜப்பான் மற்றும் வடகிழக்கு தைவானுக்கு அருகே உள்ளது.இலங்கைக்கு சீன உளவு கப்பல் வரப் போகிறது என, முதன் முதலாக 'தினமலர்' நாளிதழ் தான் செய்தி வெளியிட்டது.இதையடுத்துஇந்த விவகாரம்சர்வதேச கவனத்துக்கு வந்து, தற்போது சீன கப்பலின் வருகையை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஆக-202215:05:07 IST Report Abuse
ABI ARAVINDH, TRICHY. அதனால்தான் தினமலா் தேசிய நாளிதழாக மக்கள் மனதில் வாழ்ந்துவருகிறது. நன்றி தினமலா்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-ஆக-202207:34:37 IST Report Abuse
Kasimani Baskaran சீனாவின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்றால் முதலில் பாக்கிஸ்த்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை பிடிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Ramasamy - Chennai,இந்தியா
07-ஆக-202207:05:49 IST Report Abuse
Ramasamy Oh hoo Appo solratha Paatha Neenga thaan Peria aalu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X